»   »  உன் ஓட்டை வாயை கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா?: ஹீரோவை திட்டிய பிரமாண்ட இயக்குனர்

உன் ஓட்டை வாயை கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா?: ஹீரோவை திட்டிய பிரமாண்ட இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
உன் ஓட்டை வாயை கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கியா?: ஹீரோவை திட்டிய இயக்குனர்- வீடியோ

மும்பை: பத்மாவதி படம் ரிலீஸாகும் வரை வாயை திறக்கக் கூடாது என்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளாராம்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி படத்தில் மன்னர் அலாவுத்தீன் கில்ஜியாக நடித்துள்ளார் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே பத்மாவதியாக நடித்துள்ளார்.

படத்தில் ராணி பத்மினியை அவமதித்துள்ளதாக கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஓட்டை வாய்

ஓட்டை வாய்

ரன்வீர் சிங் கண்ணை பறிக்கும் கலர்களில் உடை அணிந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வாய் வலிக்க பேசுவதற்கு பெயர் போனவர். இந்நிலையில் பன்சாலியை ரன்வீர் சிங்கை அழைத்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டாராம்.

திட்டு

திட்டு

ரன்வீர் சிங்கை அழைத்து பன்சாலி செமயாக திட்டினாராம். ஏற்கனவே பத்மாவதி படத்திற்கு பிரச்சனையாக உள்ளது. படம் ரிலீஸாகும் வரை உன் ஓட்டை வாயை வைத்துக் கொண்டு சும்மா இரு என்று திட்டினாராம்.

பத்மாவதி

பத்மாவதி

பார்ட்டிகளுக்கு போகிறேன் என்று எங்காவது சென்று ஏதாவது உளறினால் பிச்சுப்புடுவேன் பிச்சு என்று பன்சாலி ரன்வீரை திட்டினாராம். படம் ரிலீஸாகும் வரை இருக்கும் இடம் தெரியக் கூடாது என்றாராம்.

பார்ட்டி

பார்ட்டி

கடந்த வாரம் தான் தனது காதலி தீபிகாவுடன் ஜோடி போட்டுக் கொண்டு பார்ட்டி ஒன்றுக்கு சென்றார் ரன்வீர் சிங். இந்நிலையில் பன்சாலி ரன்வீரை அழைத்து டோஸ் விட்டுள்ளார்.

English summary
Padmavati director Sanjay Leela Bhansali is upset with Ranveer Singh. The famous filmmaker recently scolded Ranveer Singh and the reason is indeed shocking. "Bhansali called Ranveer over, and told him very clearly to lay low and desist from all his flamboyant activities, till Padmavati releases.''

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil