வேலைக்கார சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தினேனா?: பானுப்ரியா விளக்கம்

By Siva

Recommended Video

Banupriya in Andhra - நடிகை பானுப்ரியா மீது போலீசில் புகார்

சென்னை: தன் வீட்டில் வேலை செய்யும் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து பானுப்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை பானுப்ரியாவின் வீட்டில் வேலை செய்யும் 14 வயது சிறுமியின் தாய் ஆந்திர மாநிலம் சமல்கோட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பானுப்ரியாவின் அண்ணன் தன் மகளை கொடுமைப்படுத்துவதாகவும், மகளை பார்க்க விடாமல் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த சிறுமி சென்னையில் வேலை செய்வதால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் சிறுமியின் தாய் மற்றும் பானுப்ரியாவை அணுகி பிரபல நாளிதழ் ஒன்று பேட்டி கண்டுள்ளது.

பானுப்ரியா

பானுப்ரியா

பானுப்ரியாவின் வீட்டில் உள்ளவர்கள் என் மகளை கொடுமைப்படுத்துகிறார்கள். என் மகளை திருப்பி அனுப்பி வைக்குமாறு கூறினால் ரூ. 10 லட்சம் கேட்கிறார்கள். பணம் தராவிட்டால் என் மகள் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிப்போம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். அவர்களின் வீட்டில் எங்கு பார்த்தாலும் சிசிடிவி கேமரா உள்ளது. அதை பார்த்தால் உண்மை புரியும் என்று சிறுமியின் தாய் அந்த நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

திருட்டு

திருட்டு

அந்த சிறுமி எங்கள் வீட்டில் ஓராண்டுக்கு மேலாக வேலை செய்கிறார். ஐபேட், பணம், கேமரா, நகைகள் உள்ளிட்டவற்றை திருடி தனது தாயிடம் கொடுத்துள்ளார். திருடியது குறித்து கேட்டதற்கு உண்மையை ஒப்புக் கொண்டார். திருடிய பொருட்களை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் என்கிறார் பானுப்ரியா.

நகை

நகை

பணம், நகைகளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஆந்திரா சென்ற அந்த சிறுமியின் தாய் பொய் புகார் கொடுத்திருக்கிறார் என்று பானுப்ரியா தெரிவித்துள்ளார். சிறுமியின் வயது குறித்து கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

குற்றம்

குற்றம்

குழந்தை தொழிலாளர்( தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த சட்டம் 2016-படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். மேலும் குழந்தையை வேலைக்கு அனுப்பிய தாய்க்கும் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X