பானுப்ரியாவை பார்த்து அப்படியொரு வார்த்தை சொன்ன யங் ஹீரோ.. கதறி அழுதுட்டாராம்.. செய்யாறு பாலு பேட்டி

சென்னை: 57 வயதாகும் நடிகை பானுப்ரியாவுக்கு மெமரி லாஸ் பிரச்சனை இருப்பதாகவும் இளம் நடிகர் ஒருவர் அவரை பார்த்து ஒரு மாதிரியாக பேசியதால் அவர் கதறி அழுதார் என செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

1983ம் ஆண்டு வெளியான மெல்ல பேசுங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பானுப்ரியா. சைதை தமிழரசியாக பங்காளி படத்தில் அவர் நடித்த நடிப்பை எல்லாம் இப்போதுள்ள நடிகைகள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Bhanupriya suffers from memory loss issues and is upset by young hero inappropriate behaviour?

நடிகை பானுப்ரியா: மெல்ல பேசுங்கள் படத்தில் அறிமுகமான பானுப்ரியா 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். சத்ரியன், தளபதி, அழகன், பரதன், சுந்தர காண்டம், அமரன், வானமே எல்லை, நீங்க நல்லா இருக்கணும், உழவன், சக்கரவர்த்தி என பல படங்களில் ஹீரோயினாக நடித்த பானுப்ரியா குணசித்ர கதாபாத்திரங்களிலும் அம்மா வேடங்களிலும் அதன் பின்னர் நடித்துள்ளார்.

தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு அம்மா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் தனுஷுக்கு அம்மாவாக பானுப்ரியா நடித்திருப்பார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் பானுப்ரியாவுக்கு அம்மா கதாபாத்திரம் தான்.

மறதி நோய்: பல படங்களில் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்த பானுப்ரியாவுக்கு சமீப காலமாக மறதி நோய் ஏற்பட்டு இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் பேசியுள்ளார் என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் கூறியுள்ளார். முன்பு போல வசனங்களை நினைவில் வைத்துக் கொண்டு பேச முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே சினிமாவில் இருந்து நடிப்பதையே நிறுத்திக் கொண்டேன் என பேசியுள்ளார்.

அசிங்கப்படுத்திய இளம் நடிகர்: சமீபத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போது ரொம்பவே வசனங்களை மறந்து விட்டு தவித்தேன் என்றும் அந்த படத்தில் ஹீரோவுக்கும் அந்த நடிகைக்கும் நிறைய காம்பினேஷன் காட்சிகள் இருந்த நிலையில், ஒண்ணு டயலாக்கை மாத்து இல்லை இந்தம்மாவை மாத்து என அந்த நடிகர் பேசியதாக செய்யாறு பாலு பகீர் கிளப்பி உள்ளார். யாரு அந்த நடிகர் என்பது குறித்து பானுப்ரியா அந்த பேட்டியில் ரிவீல் செய்யாமல் தன்னுடைய பக்குவத்தை இப்படியொரு பிரச்சனையிலும் அவர் விட்டு விடவில்லை என செய்யாறு பாலு பானுப்ரியா பற்றி பேசியிருக்கிறார்.

கண்டுக்காத நடிகர்கள்: 80ஸ் ரீயூனியன் நிகழ்ச்சிகளை நடிகர்கள் நடத்தும் போது கூட தன்னை அவர்கள் அழைப்பது கிடையாது என்றும் அவ்வளவு தான் சினிமா என ரொம்பவே வருத்தப்பட்டும் பானுப்ரியா பேசியிருப்பதாக கூறியுள்ளார். நடிகர்களின் வீட்டில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ராதிகா சரத்குமார், மீனா உள்ளிட்ட நடிகைகளை அனைவரும் தவறாமல் அழைத்து வருகின்றனர். ஆனால், பானுப்ரியாவை எங்கேயுமே பார்க்க முடியவில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு இதுதான் காரணம் என்பது தற்போது தெளிவாகி இருக்கும் என்றும் அவர் தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார். பானுப்ரியாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சினிமா உலகம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X