»   »  கோள்மூட்டி ஜூலி மீது கோபத்தில் இருக்கும் பரணியின் தங்கச்சி

கோள்மூட்டி ஜூலி மீது கோபத்தில் இருக்கும் பரணியின் தங்கச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுக்கு தகுந்தது போன்று நடிக்கும் ஜூலி மீது பரணியின் தங்கை சத்யா தேவி கோபத்தில் உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜூலி போலியாக நடந்து கொள்வதாக சக பங்கேற்பாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் பரணியின் தங்கை சத்யா தேவியும் அதையே தான் கூறுகிறார்.

Bharani's sister angry with Juliana

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் ஜூலி மிகவும் போலியாக நடந்து கொள்கிறார். என் அண்ணன் பரணியிடம் நல்லவிதமாக பேசுவது போன்று பேசி மற்றவர்களிடம் போட்டுக் கொடுக்கிறார்.

காயத்ரி மேடம், கஞ்சா கருப்பு ஆகியோர் என் அண்ணனை கண்டிப்பதில் தப்பு இல்லை. அவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுகிறார்கள். ஜூலி மட்டுமே போலியாக நடிக்கிறார்.

என் அண்ணனிடம் பாசமாக பேசிவிட்டு அவரையே எலிமினேட் செய்யச் சொல்கிறார் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு என் அண்ணனால் அதை மறக்கவே முடியாது என்றார்.

English summary
Big Boss contestant Bharani's sister Sathya Devi is angry with Juliana and calls her as fake.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil