முதன்முதலாக காக்கி சட்டை போட்டு இருக்காரு நடிகர் பரத் - காளிதாஸ் ட்ரைலர் இன்று ரிலீஸ்
சென்னை : போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு படத்திலேனும் நடித்து விட வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கு ஆசை. அந்த வகையில்
தற்போது பரத் போலீஸாக நடித்து வரும் படம் தான் 'காளிதாஸ்' .இந்த படத்தின் டீசர் முன்னதாகவே ரிலீஸ் செய்யபட்டு விட்டது. அதில் நடிகர் பரத்துடன் தானா சேரந்த கூட்டம் படத்தில் வில்லனாக நடித்த சரேஷ்மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்தது.

காளிதாஸ் படத்தில் பரத் முதன்முதலாக போலீஸாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசரை பார்க்கும் போது கொலைகளை துப்பறியும் போலீஸாக பரத் நடித்திருக்கிறார் என்பது தெரிந்தது . இதில் சமீபத்தில் பரவலாக பேசப்பட்ட 'பூளு வேல்'விளையாட்டை பற்றிய சில காட்சிகளும் டீசரில் இடம் பெற்றிருந்தது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து டிரைலர் எப்போதும் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியும் நடிகர் அருண் விஜய் இருவரும் இணைந்து " காளிதாஸ் " திரைப்படத்தின் டிரைலரை நவம்பர் 9 ம் தேதியான இன்று வெளியிட உள்ளனர் .
ஜெயம் ரவி தனி ஒருவன் ,போகன்,அடங்க மறு ஆகிய படங்களில் போலீஸாக நடித்துள்ளார். அருண் விஜய் குற்றம் 23 படத்தில் போலீஸாக நடித்துள்ளார் . இவர்கள் இருவரும் இணைந்து டிரைலரை வெளியிடுவது படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் படக்குழுவினர்.
பரத் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் அறிமுகமானார்.அதற்கு பிறகு செல்லமே ,காதல் ,பட்டியல் ,என் மகன்,வெயில்,பழனி,கண்டேன் காதலை ,வானம் கடைசியாக பொட்டு என பல படங்களில் நடித்திருந்தார் .இவர் தமிழை தவிர்த்து மலையாளம் மற்றும் ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
காளிதாஸ் படத்தில் பரத் , சுரேஷ் மேனன்,ஆதவ் கண்ணதாசன், ஆன் ஷீட்டல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . ஶ்ரீ செந்தில் இயக்கத்தில் , படத்திற்கு இசை அமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர் . படத்தின் இயக்குனர் ஸ்ரீ செந்தில் "நாளைய இயக்குனர்" என்ற பெயரில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மணி தினகரன், எம்.எஸ்.சிவனேசன் மற்றும் வி பார்கவி படத்தை லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயிண்மென்ட் பேனரின் கீழ் தயாரித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே போனது. அது எல்லாவற்றையும் கடந்து படத்தின் ட்ரைலர் நாளை நவம்பர் 9 தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். மேலும் படம் எப்போது திரையில் வெளியாகும் என்பது பற்றி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் .


Click it and Unblock the Notifications











