ப்பா.. என்னா ஸ்டெப்ஸ்.. ஜிமிக்கி கம்மலைப் போல் வைரலாகும் ஐதேயா.. டான்ஸ்!

மும்பை: இந்தி படமான பாரத் படத்தில் இடம்பெற்றுள்ள ஐதேயா டான்ஸ் ஜிமிக்கி கம்மல் பாடலைப் போல் வைரலாகி வருகிறது.

சல்மான் கான் - கேத்ரீனா கைப் இணைந்து நடித்த படம் பாரத். இந்த படம் கடந்த மாதம் 5ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியானது.

Bharat movies Aithey aa song dance goes viral on Social media

இந்த படத்தில் நடிகை தபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஐதேயா என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

அந்த பாடலில் கேத்ரீனா கைப் மற்றும் சல்மான் கான் இணைந்து நடனமாடியிருப்பார்கள். திருமண விழாவை கொண்டாடும் வகையில் அந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த பாடல் பலராலும் விரும்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடுவது தற்போது வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சி நடிகையான மோனலிசா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். பாடலின் பீட்டுக்கு ஏற்ப அற்புதமாக அவர் சேலையில் ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தான் நடனம் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மோனலிசா. அதனை பலரும் லைக் செய்த கையோடு ஷேரும் செய்து வருகின்றனர்.

அண்மையில் கேரள பெண்கள் நடனமாடியிருந்த ஜிமிக்கி கம்மல் நடனத்தை போல் இந்த ஐதேயா பாடலும் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X