இந்தியளவில் டிரெண்டான #Bharateeyudu2.. அதிகாலை காட்சிகளால் ரசிகர்கள் அலப்பறை!

சென்னை: தமிழ்நாட்டில் இந்தியன் 2 படம் காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. ஆனால், அதிகாலை 6 மணிக்கே தெலுங்கிலும் இந்தியிலும் இந்தியன் 2 படம் வெளியான நிலையில், #Bharateeyudu2 ஹாஷ்டேக்கை டோலிவுட்டில் உள்ள கமல்ஹாசன் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக 2 சீன்களில் வந்த கமல்ஹாசனுக்கே ஃபயர் விட்ட ரசிகர்கள் இந்தியன் 2 படத்தில் சிக்ஸ்பேக் எல்லாம் வைத்துக் கொண்டு 100 வயதை தாண்டிய இந்தியன் தாத்தா சண்டை போடுவதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.

Indian 2 Kamal Haasan Shankar 2

ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் மற்றும் கமல்ஹாசனின் ஆக்டிங் இந்தியன் 2 படத்துக்கு மிகப்பெரிய பலம் என Bharateeyudu முதல் பாகத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் Bharateeyudu 2 படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

Bharateeyudu 2: இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு தமிழில் வெளியான போதே பான் இந்தியா படமாகத்தான் வெளியானது. இந்தியில் இந்துஸ்தானி என்றும் தெலுங்கில் பாரத்தீயுடு என்கிற டைட்டிலிலும் வெளியானது. முதல் பாகம் தமிழில் வெற்றிப் பெற்றதை போலவே தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், 26 வருடங்கள் கழித்து தெலுங்கிலும் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

Indian 2 Kamal Haasan Shankar 2

சிக்ஸ்பேக்குடன் சண்டை: இந்தியன் தாத்தாவுக்கு 106 வயது இருக்கும் இப்போ எப்படி சண்டை போடுகிறார் என்கிற கேள்விகள் ஒரு பக்கம் எழுந்து வந்த நிலையில், அதற்கு சீனாவில் உள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர்கள் 120 வயது வரை சண்டை போடுகின்றனர் என கமல்ஹாசன் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கமல்ஹாசன் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு சண்டை போடும் காட்சிகள் இந்தியன் 2 படத்தில் உள்ளது டோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேம் சேஞ்சர் ரெஃபரன்ஸ்: இந்தியன் 2 படத்தில் சிவாஜி தி பாஸ் படத்தின் ரெஃபரன்ஸ் தமிழ் ரசிகர்களுக்காக உள்ள நிலையில், டோலிவுட் ரசிகர்களுக்காக ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் 'ஜரகண்டி' பாடல் ரெஃபரன்ஸ் உள்ளதாக தெலுங்கு சினிமா ரசிகர்கள் ஸ்பாய்லர் செய்து வருகின்றனர்.

Indian 2 Kamal Haasan Shankar 2

வசூல் அள்ளுமா?: இந்தியன் 2 திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் மேலும், வசூல் அதிகரிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்தியன் தாத்தாவை தியேட்டரில் பார்க்க நினைக்கும் ரசிகர்கள் நிச்சயம் தியேட்டரில் படத்தை கொண்டாடுவார்கள் என்றும் ஷங்கரின் பிரம்மாண்டத்தை தியேட்டரில் மிஸ் செய்து விட வேண்டாம் என்றும் டோலிவுட் ரசிகர்களே கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X