Love Twitter review: படம் பார்த்தால் தலைவலி இலவசம்...லவ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: பரத்தின் 50வது படமான லவ் படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இதில் வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆர்.பி.பாலா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ரோனி ரஃபேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜய் மனோஜ் படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்.
இன்று வெளியாகி உள்ள லவ் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

பரத்தின் லவ்: நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் கூட்டணியில் ஏற்கனவே மிரள் படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்த கூட்டணி மீண்டும் ஜோடியாக லவ் படத்தில் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் திருமணத்திற்கு முந்தைய காதல் பற்றியும், ரொமான்ஸ், காதலின் பிரிவு,தவிப்பு பற்றித்தான் பேசி இருப்பார்கள்.
த்ரில்லர் படம்: ஆனால், காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் திருமணத்திற்கு பின் காதல் இருந்த இடமே தெரியாமல் போய்விடுகிறது அதை லவ் திரைப்படத்தில் இயக்குநர் அழகாக சொல்லி கதையை நகர்த்தி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காலித் ரகுமான் இயக்கத்தில் டாம் சாக்கோ நடிப்பில் மலையாளத்தில் வெளியான லவ் திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த லவ் திரைப்படம்.
சம்பந்தமே இல்ல: இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள லவ் திரைப்படத்தை பார்த்த ட்விட்டர் வாசி நடிகர் பரத் நடித்து இன்று 28 ஆம் தேதி வெளியாகவுள்ள "LOVE" திரைப்படத்திற்கும் பெயருக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. பரத் இப்படி ஒரு கதையை எப்படி தேர்வு செய்தாரோ? இந்த படம் பார்த்தால் தலைவலி இலவசம் என்று படுமோசமான கருத்தை பகிர்ந்துள்ளார்.

சிறப்பான நடிப்பு: மற்றொருவர் படம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடப்பது போல காட்டினாலும் முத்தையாவின் ஒளிப்பதிவு மனதில் ஒட்டவில்லை என்றாலும், சலிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், பரத், வாணி போஜன் ஒரு நிஜ கணவன் மனைவி போல் சிறப்பாக நடித்து காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











