பாடலே இல்லாத டார்க் த்ரில்லர் படம்...பரத்துக்கு ஜோடியாகும் வாணி போஜன்

சென்னை : கோலிவுட்டில் இது த்ரில்லர் பட சீசன். அதனால் தொடர்ந்து அதிக அளவில் த்ரில்லர் படங்களே இயக்கப்பட்டு வருகின்றன. ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கை கூட குறைந்து வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு த்ரில்லர் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன் இயக்குனர் சக்திவேல்.

புதுமுக இயக்குனரான எம்.சக்திவேல் இயக்கும் டார்க் த்ரில்லர் படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றி சக்திவேல் கூறுகையில், இது வித்தியாசமான படமாக இருக்கும். நீங்கள் த்ரில்லர் என்று சொன்னால் அது ஒரு குறிப்பிட்ட ரக ரசிகர்களை குறிக்கும். ஆனால் இது குடும்பங்களையும் ஈர்க்கும் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

இன்ஜினியராக நடிக்கும் பரத்

இன்ஜினியராக நடிக்கும் பரத்

இந்த படத்தில் இன்ஜினியராக பரத்தும், அவரது மனைவியாக வாணியும் நடிக்கிறார்கள். நான் இந்த கதையை எழுதும் போதே இவர்கள் இந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என தோன்றியது. நடிப்பிற்கு ஏற்றவர்களாகவும், ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.

இவர்கள் சரியான தேர்வு

இவர்கள் சரியான தேர்வு

இருவருமே தங்கள் வேலைகளில் திறமையானவர்கள். அதனால் என் கதைக்கு இவர்கள் பொருத்தமாக இருப்பார்கள். டில்லி பாபுவிடம் நான் இந்த கதையை கூறிய போது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரும் இந்த படத்திற்கு அவர்கள் சரியான தேர்வு என கூறினார். இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் இந்த படத்தில் இருக்கும். இவர்களின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் இந்த படத்தில் பார்ப்பார்கள்.

 குடும்ப கதை

குடும்ப கதை

ஒட்டுமொத்த கதைகளமும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஒரு எளிமையான குடும்பத்தை சுற்றி தான் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார் சக்திவேல். இந்த படம் தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் குறிப்பிட்ட அளவிலான கேரக்டர்கள் தான்.

பாடல்களே கிடையாது

பாடல்களே கிடையாது

இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்ற கூடுதல் தகவலையும் பகிர்ந்துள்ளார் சக்திவேல். கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியிடப்படும் எனவும் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X