மகேஷ்பாபு படத்துக்கு செம வரவேற்பு.. ஒரே நாளில் தெறி வசூல்!

By Vignesh Selvaraj

சென்னை : மகேஷ்பாபு நடிப்பில் கொரட்டல சிவாவின் 'பாரத் அனே நேனு' படம் நேற்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பொலிட்டிகல் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் மகேஷ்பாபு.

தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் நேற்று ஒரு படம் மட்டுமே வெளியானதால் 'பாரத் அனே நேனு' படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்தன.

bharath ane nenu box office collection

இந்தப் படம் உலகம் முழுவதும் 45 நாடுகளில் 2000 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. தெலுங்கானாவில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஐதராபாத் சென்று ரசிகர்கள் இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துள்ளனர்.

'பாரத் அனே நேனு' திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.40 கோடி வரை வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ.60 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வசூல் தொடர்ந்தால், 'பாரத் அனே நேனு' படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் மகேஷ்பாபு ரசிகர்களும் இப்படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X