எங்க வீட்டுக்கு ஒரு பொண்டாட்டி தானே இருக்க முடியும்.. மேடையில் வந்த அந்த டாபிக்.. கடுப்பான பரத்!

சென்னை: இயக்குநர் பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத், அபிராமி, பவித்ரா லக்‌ஷ்மி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ் படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. அதில், நடிகர் பரத் மற்றும் படத்தில் நடித்துள்ள நடிகைகள் பங்கேற்றனர்.

Once Upon A Time in Madras படத்தில் கத்திக்கு பதிலாக துப்பாக்கியை வைத்துள்ளது ஏன் என்கிற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பிரசாத் முருகன் 12 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். படம் பார்த்தால், அது ஏன் என்பது தெரிய வரும் என்றார்.

bharath abhirami hema comittee

மலையாள சினிமாவில் வெடித்து வரும் பாலியல் தொல்லை புகார்கள் குறித்த கேள்விக்கு நடிகர் பரத் மேடையில் கடுப்பானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவாய்ட் பண்ண அபிராமி: நடிகர் பரத் அந்த கேள்வியை ஏன் இங்கே கேட்குறீங்க என டென்ஷனான நிலையில், நடிகை அபிராமி அதற்கான மேடை இதுவல்ல என்றும் இந்த படத்தை பற்றிய கேள்வியை மட்டும் கேளுங்கள் என ஹேமா கமிட்டி விவகாரம் பற்றி பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

ஒரு பொண்டாட்டி தான் இருக்க முடியும்: அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லக்‌ஷ்மி என ஏகப்பட்ட நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், படத்தின் ஹீரோ அனைத்து நடிகைகளுடனும் காம்பினேஷன் வைக்க கேட்டாரா என்கிற கேள்வியை எழுப்ப, அப்படியெல்லாம் பரத் சார் கேட்கவே இல்லை. படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் பண்ணுங்க என்றார்.

bharath abhirami hema comittee

உடனடியாக மைக்கை வாங்கி பேசிய பரத் இந்த படத்தில் எனக்கு ஒருத்தர் தான் ஜோடி. 4 கதைகள் நடக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் நடிகைகள் உள்ளனர். அவர்களுடன் எனக்கு காம்பினேஷன் இல்லை என்றார். மேலும், எங்க வீட்டுக்கு ஒரு பொண்டாட்டி தானே இருக்க முடியும் என்றும் பக்கத்து வீட்டை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் சென்றால் தேவையற்ற பிரச்சனை தான் வரும் என்றார்.

இளமையின் ரகசியம்: 21 வருஷமா சினிமாவில் இருக்கும் பரத் இன்னமும் அப்படியே இருக்காரே என்கிற கேள்விக்கு, என்னோட இளமையின் ரகசியம் நான் பேராசை படுவதில்லை. பெரிய நடிகராக மாற வேண்டும் என்றோ அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றோ நினைப்பது கிடையாது. கிடைப்பதை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X