சல்மான் படம்.. பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புற்றி வைத்த பரத்.. அப்ப வில்லன் யார் தெரியுமா?

சல்மான் கானின் ராதே படத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்றும், போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

ராதே படத்தில் பரத் வில்லனாக கமீட் ஆகியுள்ளார்

சென்னை: சல்மான் கானின் ராதே படத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.

தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் பரத். ஜாக்பாட் அடித்தது போல் இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தில் நடிக்கும் வாய்ப்பு பரத்துக்கு கிடைத்தது.

ராதே படத்தில் சல்மானுக்கு வில்லனாக பரத் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

பிரபு தேவா கொடுத்த வாய்ப்பு

பிரபு தேவா கொடுத்த வாய்ப்பு

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பரத் அளித்துள்ள பேட்டியில், "பிரபு தேவா மாஸ்டரை எனக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். நல்ல திறமைகளை மதிக்கக்கூடியவர் அவர். ஜெயம் ரவியின் பிறந்தநாள் விழாவில் இருந்த போது, பிரபு தேவா மாஸ்டர் போன் செய்து, ராதே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறினார்.

வில்லன் இல்லை

வில்லன் இல்லை

இந்த படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. ரன்தீப் ஹூடா தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராதே படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சல்மான் கானுடன் எப்போதும் உடனிருக்கும் கேரக்டர் அது. இந்த படத்துக்காக இன்னும் அதிகமாக ஜிம் ஒர்க்கவுட் செய்து, உடம்பை ஏற்றியுள்ளேன்.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதால், இந்தியில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பது ஓகே தானா என பிரபு தேவா கேட்டார். ஆனால் இந்த நல்ல வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதறக்காக உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டேன். இந்த படத்தில் எனது லுக் ஸ்டைலாகவும், கடினமானதாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கும்.

சல்மானின் ரசிகன்

சல்மானின் ரசிகன்

சல்மான் கானை எனக்கு சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது இருந்தே தெரியும். அந்த நேரத்தில் எல்லோரும் ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருப்போம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சல்மான் அப்படியே வேறு. ஒரு ரசிகனாக அவரது நடிப்பை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்", என பரத் தெரிவித்துள்ளார்.

பரத்தின் காளிதாஸ்

பரத்தின் காளிதாஸ்

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள காளிதாஸ் படம் விரைவில் வெளியாக உள்ளது. சைகோ திரில்லர் படமான இதிலும், பரத் காவல்துறை அதிகாரி வேடத்தில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X