தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு தேர்வான பரத்தின் நடுவன் படம்

சென்னை : நடிகர் பரத் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது நடுவன். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்க பெற்ற நிலையில் பல்வேறு விருதுகளுக்கு தேர்வாகி வருகிறது. இந்நிலையில் தற்போது 12வது தாதா சாகேப் பால்வே விருது 2022க்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது.

நடிகர் பரத்

நடிகர் பரத்


நடிகர் பரத் தொடர்ந்து அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் நடுவன் படம் வெளியானது. இயக்குநர் ஷரன்குமார் படத்தை இயக்கியிருந்த நிலையில் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

பரத்தின் நடுவன்

பரத்தின் நடுவன்

சர்வதேச அளவில் உலக திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பங்கேற்று வருகிறது. சிங்கப்பூர், மலேசியா திரைப்பட விழா, புதுச்சேரி போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது. கடந்த ஆண்டில் செப்டம்பரில் இந்தப் படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானது.

தாதா சாகேப் பால்கே விருது விழாவிற்கு தேர்வு

தாதா சாகேப் பால்கே விருது விழாவிற்கு தேர்வு

இதனிடையே நடுவன் படம் 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களது படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக படத்தின் இயக்குநர் ஷரன் குமார் தெரிவித்துள்ளார். படத்தை தேர்வு செய்த ஜூரி உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஓடிடி ரிலீஸ்

ஓடிடி ரிலீஸ்

இந்தப் படம் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் தொடர்ந்து சிறப்பான அங்கீகாரத்தை பெற்று வருவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பரத், அபர்ணா வினோத், கோகுல் உள்ளிட்டவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது

ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கிறது

இதுபோன்ற மரியாதைகள், நல்ல உள்ளடக்கம் சார்ந்த கதைகளை இயக்க பெரும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் அழுத்தமான கதை மற்றும் அதிரடி திருப்பங்களுடன் த்ரில்லர் கதையாக வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X