நானும் யுவன் சங்கர்ராஜாவின் வெறித்தனமான ஃபேன் தான்.. ஜிம்மில் பாட்டுப் பாடி அசத்திய பரத்!
சென்னை : மலையாளத்தில் அடுத்தடுத்து நான்கு முக்கிய திரைப்படங்களில் நடிகர் பரத் நடித்து வருகிறார்.
டைம் என்ன பாஸ் வெப் சீரிஸ்க்கு பிறகு இப்பொழுது அறிமுக இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற அதில் இவருக்கு ஜோடியாக நடிகை ஜனனி ஐயர் நடித்து வருகிறார்.
கதை தேர்வில் மிகவும் கவனமாக ஈடுபட்டு வரும் நடிகர் பரத் இப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்த கையோடு யுவன் சங்கர் ராஜாவின் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை பாடி அசத்தி தானும் ஒரு யுவன் சங்கர் ராஜாவின் தான் என பதிவிட்டுள்ளார்.

சரிவர ஓடாமல்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் பரத் தமிழ், மலையாளம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமாக உள்ளவர். குறிப்பாக இவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் கடந்த சில காலமாக இவர் நடித்த பல திரைப்படங்கள் சரிவர ஓடாமல் தோல்வியையே தழுவி வருகிறது.

அடுத்தடுத்து நான்கு
கடைசியாக வெளியான காளிதாஸ் சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்து நம்பிக்கை தரும் வெற்றியை பெற்றுத்தர தற்பொழுது கதை தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வரும் இவருக்கு மலையாளத்திலும் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அடுத்தடுத்து நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் துல்கர் சல்மான் நடிக்கும் குரூப் திரைப்படமும் ஒன்று.

ரொமான்டிக் கதையில்
நடிகர், இயக்குனர்,நடன இயக்குனர் என பல முகங்களை கொண்டு இப்போது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிகொண்டிருக்கும் பிரபுதேவா மீண்டும் சல்மான் கானை இயக்க ராதே பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பரத் நடித்துள்ளார். டைம் என்ன பாஸ் வெப் சீரிஸ்க்கு பிறகு தொடர்ந்து அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வரும் பரத் இப்பொழுது இக்ஃலூ படத்தை இயக்கிய பாரத் மோகன் இயக்கும் ரொமான்டிக் கதையில் நடிகை ஜனனி ஐயர் உடன் இணைந்து நடித்து வருகிறார் அதேபோல மற்றுமொரு அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் இவருக்கு ஜோடியாக வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மூச்சுவிடாமல் பாடி
மென்மேலும் பல வெற்றி படங்களை கொடுக்க தயாராக இருக்கும் நடிகர் பரத் உடற்பயிற்சி விஷயத்தில் எப்பொழுதுமே தவறியதில்லை என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்க தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்து முடித்த கையோடு வியர்வை நீர் சொட்டச் சொட்ட யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெறும் நினைத்து நினைத்து பார்த்தால் பாடலை பீல் செய்து மூச்சுவிடாமல் பாடி அசத்தியதோடு நான் ஒரு வெறித்தனமான யுவன் பேன் எனவும் கூறி பதிவிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











