தாடிய எடுக்கறதே மீண்டும் வளக்கற சந்தோஷத்துக்குதான்... நடிகர் பரத்தின் புதிய லுக்

சென்னை : சமீபத்தில் வெளியான சல்மானின் ராதே படத்தில் நடித்துள்ளார் நடிகர் பரத்.

தற்போது சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய லுக்கை அவர் வெளியிட்டுள்ளார்.

ராதேவில் நடித்துள்ள பரத்

ராதேவில் நடித்துள்ள பரத்

பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான பரத் பல படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றுள்ளார். தமிழில் கடந்த 2019ல் வெளியான காளிதாஸ் படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பாலிவுட் படமான ராதே படத்திலும் அவர் நடித்துள்ளார்.

கமிட்டான பரத்

கமிட்டான பரத்

மேலும் சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் அவர் கமிட் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் துவங்களவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வமானவர் பரத்.

ஒர்க்-அவுட் வீடியோக்கள்

ஒர்க்-அவுட் வீடியோக்கள்

சமீபத்தில் தனது மகன்களை வைத்து இவர் செய்த ஒர்க்-அவுட் வீடியோ மற்றும் இவர் செய்த சைக்கிளிங் புகைப்படம் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தன்னுடைய புதிய லுக் குறித்த புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

தாடி இல்லாத சந்தோஷம்

தாடி இல்லாத சந்தோஷம்

இதில் மீசை, தாடி அனைத்தையும் மழித்துவிட்டு, க்ளீனாக இருக்கிறார். இந்த சம்மரில் இந்த லுக் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. மேலும் தாடியை மழிப்பதே மீண்டும் வளர்க்கும் சந்தோஷத்திற்காக தான் என்றும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X