பரத்தின் யாக்கை திரி.. படப்பிடிப்புக்கு பூஜை போட்டாச்சு!
சென்னை: பரத், ஜனனி ஐயர், சோனாக்ஷி சிங் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திற்கு யாக்கை திரி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை இயக்குனர் பரத் மோகன் இயக்க, அரோல் கோரெல்லி இசையமைக்க உள்ளார்.
இந்த படத்திற்கு பெயரிடப்பட்டு படபிடிப்பிற்கான பூஜை நேற்று படக்குழுவினருடன் நடைபெற்றது.

தொடர்ந்து பயணிப்பாரா?
2020ம் ஆண்டு பரத்துக்கு நன்றாகவே அமைந்துள்ளது. பரத்தின் நடிப்பில் வெளியான காளிதாஸ் திரைப்படம், டைம் என்ன பாஸ் வெப் சீரியஸ் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற 2021ல் தொடர்ந்து வெற்றி பாதையில் பயணிப்பாரா என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

வெற்றி தொடருமா
பரத் மோகன் இயக்கத்தில் அம்சத் கான், அஞ்சு குரியன், ஆகியோர் நடிப்பில் Zee5 ல் வெளியான படம் தான் இக்லூ. இந்த படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து இழுக்க அதே போல் ஒரு வெற்றி யாக்கை திரி படத்தில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உள்ளது.

ரொமாண்டிக் கதைக்களம்
யாக்கை திரி என்ற தலைப்பில் இருந்தே காதலை மையமாக கொண்ட ரொமாண்டிக் கதைகளம் என தெரிகிறது. படத்தின் நடிகரும், இயக்குனரும் இந்த கதைகளத்தில் கலக்குவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுடைய படங்களை வைத்தே யூகிக்க முடிகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
யாக்கை திரி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்று பூஜையுடன் துவங்க, இந்த புத்தாண்டில் பரத்துக்கு யாக்கை திரி படம் திருப்பு முனையாக அமையுமா எனவும், பரத் மோகனின் மேஜிக் இந்த படத்திலும் தொடருமா எனவும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் மிகுந்து காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











