விஜய் 60: அடித்தது அதிர்ஷ்டம் அழகிய தமிழ் மகன் இயக்குனருக்கு

By Manjula

சென்னை: முன்னணி இயக்குனர்கள் பலரும் காத்திருந்த நிலையில் விஜய்யின் 60 வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் அழகிய தமிழ் மகன் இயக்குனர் பரதன்.

புலி படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தனது 59 வது படத்தில் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து விஜய்யின் 60 வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் சுழன்று கொண்டிருந்தது.

தற்போது விஜய்யின் 60 வது படத்தைக் கைப்பற்றி ரசிகர்களின் ஆர்வத்திற்கு விடையளித்திருக்கிறார் அழகிய தமிழ்மகன் இயக்குநர் பரதன்.

விஜய் 60

விஜய் 60

விஜய் புலி படத்திற்குப் பின்னர் அட்லீ இயக்கத்தில் தனது 59 படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவரது 60 வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் அலையாக எழுந்தது. விஜய்யின் 60 வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் இவர்தான் என்று ஏ.ஆர்.முருகதாஸில் தொடங்கி பிரபுதேவா, ஹரி, மோகன்ராஜா, எஸ்.ஜே.சூர்யா போன்ற பலரின் பெயர்களும் அடிபட்டு கடைசியாக கார்த்திக் சுப்புராஜில் வந்து முடிந்தது.

விஜய் 60 பரதனுக்கே

விஜய் 60 பரதனுக்கே

கடைசியாக அந்த வாய்ப்பு இளம் இயக்குனர்களில் ஒருவரான பரதனுக்கு கிடைத்திருக்கிறது. இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் வீரம் படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க முன்வந்தனர்.

ஹரி இயக்கத்தில்

ஹரி இயக்கத்தில்

பரதன் எழுதிய கதை விஜயா நிறுவனத்திற்கு பிடித்துப் போய்விட இந்தக் கதையை படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் வேறு ஒருவர் விஜய்யை வைத்து இயக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. கடைசியில் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இயக்குவார் என்று கூறினர்.

பரதனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

பரதனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

வீரம் படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தின் வசனங்களும் ஒரு பெரிய பங்கை ஆற்றி இருந்தன. இந்த வசனங்களை படத்தின் இயக்குநர் சிவாவுடன் இணைந்து பரதன் எழுதியிருந்தார். எனவே பரதனே இந்தப் படத்தை இயக்கட்டும் என்ற முடிவிற்கு விஜயா நிறுவத்தினர் வந்து விட்டதாகவும் இதற்கு விஜய்யும் ஒத்துக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த வருடத்தில்

அடுத்த வருடத்தில்

இந்தப் படத்தின் படப்பிடிப்பானது அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் மேலும் இது ஒரு ரொமான்ஸ் கலந்த ஆக்ஷன் கதை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்படத்தின் நடிக, நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X