சீரியல் நடிகைகளையும் சும்மா விடல.. பாரதி கண்ணம்மா நடிகையை துரத்திய அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்!
சென்னை: விஜய் டிவியின் பிரபலமான சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகைக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் நடைபெற்றதாக சமீபத்திய பேட்டியில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக பல நடிகைகள் வெளிப்படையாக திரைத்துறையில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்திரையில் நடித்தால் சேஃப் என அங்கே செல்லும் இளம் நடிகைகளுக்கும் இந்த தொல்லை அரங்கேறி வருவதாக பாதிக்கப்பட்ட நடிகைகளே பேசி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பாரதி கண்ணம்மா
விஜய் டிவியின் பாப்புலரான சீரியலான பாரதி கண்ணம்மா முதல் சீசன் ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் சென்ற நிலையில், கடைசியில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த நிலையில், ஹேமா, லட்சுமி இருவருமே தனக்கு பிறந்த குழந்தைகள் தான் என்பது தெரிந்ததும் மனைவி மற்றும் குழந்தைகளிடம் பாரதி மன்னிப்பு கேட்க, கண்ணம்மா ஊரை விட்டு கிராமத்துக்கு செல்கிறார்.

சுபமான முடிவு
கிராமத்தில் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியல் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பாரதி கண்ணம்மாவின் மனதை மாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு கடைசியாக பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் மீண்டும் திருமணம் நடைபெற்று சுபமான முடிவாக முதல் சீசன் முடிவடைந்தது.

சர்ப்ரைஸ் சீசன் 2
முதல் சீசன் முடிந்த நிலையில், உடனடியாக பாரதி கண்ணம்மா சீசன் 2 ஆரம்பித்துள்ளது. டாக்டர் பாரதியாக நடித்த அருண் பிரசாத் மாற்றப்பட்ட நிலையில், இரண்டாவது கண்ணம்மாவா வந்த நடிகை வினுஷா தேவி சீசன் 2விலும் கண்ணம்மாவாக நடித்து வருகிறார். இந்த பாரதி கண்ணம்மா 2வில் ஹீரோவாக ரோஜா சீரியலில் நாயகனாக நடித்து வந்த சிபு சூர்யன் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா பிரசாத்துக்கு டார்ச்சர்
பாரதி கண்ணம்மா சீசன் 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை ரேஷ்மா பிரசாத் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் குறித்து பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் சின்னத்திரை நடிகை தேவிப்பிரியாவும் சீரியல்களில் நடிக்கவும் அட்ஜெஸ்ட்மென்ட் தொல்லை இருப்பதாக பேசி பரபரப்பை கிளப்பி இருந்தார்.

அப்ளிகேஷனிலேயே அந்த ஆப்ஷன்
மது கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பிரசாத் பல சீரியல்களில் நடிக்க முயற்சி செய்து வந்தேன். ஆனால், அவர்கள் அனுப்பும் அப்ளிகேஷன் ஃபார்மிலேயே அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு யெஸ் ஆர் நோ என்கிற ஆப்ஷன் இருக்கும் என்றும் ஹீரோயின் கேரக்டர் கூட இல்லைங்க, கேரக்டர் ரோலுக்கே அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க என்றும் அப்படி கேட்பவர்களிடம் அடப் போங்கடா எனக்கான நேரம் வரும் போது நல்ல ரோலில் நடிச்சிக்கிறேன் என்று தான் அந்த வாய்ப்புகளை உதறித் தள்ளிடுவேன் என பேசி உள்ளார்.

சும்மா விடமாட்டாங்க
அப்ளிகேஷனில் நோ என்று சொல்லி அனுப்பினாலும், தனியா போன் செஞ்சு கன்வின்ஸ் பண்ண பார்ப்பாங்க, நல்ல ரோல் கிடைக்கும், கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணுங்க என கொக்கிப் போடுவார்கள். ஏற்கனவே அதுக்கு நோன்னு தானே போட்டு இருக்கேன், அப்ளிகேஷனை முழுசா பார்க்கவே இல்லையா என்றும் திட்டிட்டு போனை வச்சிருக்கேன் எனக் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











