கார்த்திக் ஆட்களிடமிருந்து மிரட்டல்.. ராதாரவி, பிரபு போட்ட ஆர்டர்.. பேட்டியால் சிக்கிய பாரதி கண்ணன்
சென்னை: இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நவரச நாயகன் கார்த்திக் பற்றி பல விஷயங்களை பேசியிருந்தார். அதுவும் கார்த்திக்கின் மாடுலேஷனிலேயே பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக சோஷியல் எங்கு பார்த்தாலும் பாரதி கண்ணன் பற்றியும், கார்த்திக் பற்றியும்தான் பேச்சாக இருந்தது. இந்நிலையில் அந்தப் பேட்டியால் அவருக்கு மிரட்டல்களும் வந்திருக்கின்றன.
திருநெல்வேலி, கண்ணாத்தாள், பண்ணாரி அம்மன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பாரதி கண்ணன். இப்போது நடிகராகவும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் நவரச நாயகன் கார்த்திக் பற்றி பேசுகையில், "கார்த்திக்கை சந்தித்து கதை சொல்ல போனேன். போகும்போதே ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸோடுதான் போனேன்.
ஊட்டியில் நட்ந்த சந்திப்பு: அவர் என்னை பார்த்ததும் பொதுவாக பணத்தை நான் கையில் தொடுவது இல்லை அப்பா ஃபோட்டோவில் வைத்துவிடுங்கள் என்று சொன்னார். பிறகு தனது கழுத்தில் போட்டிருந்த செயினை தொட்டு பார்த்துவிட்டு இந்தப் படம் நன்றாக வரும் எனவும் ஆரூடம் சொன்னார். அதனையடுத்து திங்கட்கிழமைக்கு மேல் ஊட்டியில் இருப்பேன். அங்கு வந்து கதை சொல்லும்படி பணித்தார்.

இன்னும் வாங்கவில்லை: அங்கு சென்றவர் ஃபோன் செய்து இன்னொரு 5 லட்சம் ரூபாய் கிடைக்குமா என கேட்க; நான் அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு சென்றேன். அங்கே அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றபோது டேபிளில் ஐந்து கிளாஸ்கள் இருந்தன. அத்தனை கோப்பைகளிலும் ஒரே நேரத்தில் ஊற்றி குடித்தார். பிறகு கதையை மாற்ற சொன்னார். தயாரிப்பாளரோ கார்த்திக்கை வைத்து படம் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டார். கடைசிவரை அந்த 10 லட்சம் ரூபாயை வாங்கவே முடியவில்லை" என கூறியிருந்தார். இதுதவிர்த்து இன்னும் பல விஷயங்களை பேசியிருந்தார்.
கார்த்திக்கின் லீலைகள்: அவர் அப்படி பேசியதை அடுத்து வேறு சிலரும் கார்த்திக் திரைத்துறையில் செய்த சேட்டைகள் பற்றி ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கார்த்திக்கும், பாரதி கண்ணனும்தான் சோஷியல் மீடியாவில் ஹெட்லைன்ஸாக இருந்தார்கள். இந்நிலையில் அந்தப் பேட்டி குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அப்போது தனக்கு மிரட்டல் வந்ததாக தெரிவித்தார்.
பாரதி பேட்டி: அவர் நேற்று தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "கார்த்திக் மிகச்சிறந்த திறமைசாலி. அவர் அசாத்தியமான நடிகர். நியாயமான அழகன். அந்தப் பேட்டியில் நகைச்சுவைக்காக சொன்ன விஷயங்கள் வேறு மாதிரி ஆகிவிட்டன. அவரிடம் பத்து லட்சம் கொடுத்தது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது அந்த வலி மறந்தும்போய்விட்டது, மறத்தும்போய்விட்டது.
வந்த மிரட்டல்: அந்தப் பேட்டியை பார்த்துவிட்டு திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கார்த்திக்கின் ரசிகர்கள் எனக்கு ஃபோன் செய்து, 'என்ன அண்ணே இப்படி பேசிட்டிங்களே. இன்னமும் நாங்கள் அவரை தெய்வமாக மதிக்கிறோம். நெஞ்சில் பச்சையெல்லாம் குத்தியிருக்கிறோம். இனி இப்படி பேசாதீர்கள் அண்ணேன்' என சாஃப்ட்டாக மிரட்டினார்கள். நானும் அவர்களிடம் வருத்தம் தெரிவித்தேன். அதேபோல் பிரபு, ராதாரவி ஆகியோரும் ஃபோன் செய்தார்கள். நீங்களும் நடிக்கிறீர்கள். அவரும் நடித்து சாதனை படைத்தவர். இப்படி பேசியிருக்க வேண்டாம். இனிமேல் இப்படி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











