வடிவேலு ஹாலிவுட் ஸ்டார் மாதிரி எதை எதையோ காட்டுகிறார்.. சம்பளம் மட்டும் இத்தனை கோடி.. இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த வடிவேலு இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த மாமன்னன், மாரீசன் படங்கள் அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுக்கொடுத்தன. இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்டாலும்; இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன்; வடிவேலு பற்றி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

வைகை புயல் வடிவேலு விஜயகாந்த்தை எதிர்ப்பதற்காக திமுக மேடைகளில் ஏறினார். அப்படி ஏறிய அவர் சகட்டுமேனிக்கு கேப்டனை பேசிவைக்க அந்த விவகாரம் பற்றி எரிந்தது. ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து; வடிவேலுவை சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் வைகை புயல் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது.

Bharathi Kannan Reveals Vadivelu Salary and Talks About His Transformation
Photo Credit:

மீண்டும் வந்த புயல்: அரசியல் பிரச்னைகள் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்திலும் பிரச்னை ஏற்பட அதுவும் அவருக்கு நெருக்கடியை கொடுத்தது. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட மீண்டும் நடிக்க வந்தார் வடிவேலு. இரண்டாவது இன்னிங்ஸை சுராஜின் இயக்கத்தில் ஆரம்பித்த அவருக்கு பெரிய வெற்றி இல்லை. ஆனால் அடுத்ததாக வந்த மாமன்னன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

வடிவேலு 2.0: இந்த முறை வடிவேலு இன்னொரு வெர்ஷனாகவே வந்திருக்கிறார். காமெடி ரோலிலேயே வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் மாமன்னன், மாரீசன் ஆகிய படங்களில் அவரது நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள், கலங்கினார்கள். கேரக்டர் ரோலிலேயே இனிமேல் வடிவேலு நடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இனி வரும் படங்களிலும் அவரை அப்படியே எதிர்பார்க்கலாம் என்றே திரைத்துறையில் குரல்கள் கேட்கின்றன.

அடுத்த படங்கள்: கடைசியாக மாரீசன் படத்தில் நடித்த வடிவேலு அடுத்ததாக சில இயக்குநர்களிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருப்பதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு பற்றி பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "வடிவேலு இப்போது ஒரு படத்துக்கு 15 கோடி ருபாய் சம்பளமாக வாங்குகிறார்.

அந்த வடிவேலு வேற: நாங்கள் பார்த்த வடிவேலு வேறு. இப்போது இருக்கும் வடிவேலு வேறு. அப்போதெல்லாம் வடிவேலு சூனா பானா கேரக்டரில் லுங்கி கட்டி பீடி பிடித்தபடி எதார்த்தமாக இருந்தார். அதனால் மக்களும் அவரை தங்களில் ஒருவராக பார்த்தார்கள். இப்போதோ ஹாலிவுட் ஆர்ட்டிஸ்ட் போல் காரிலிருந்து இறங்குகிறார். ஷூ மட்டுமின்றி எதை எதையோ காட்டுகிறார். பின்னர் எப்படி அவர் மக்களிடம் ஒட்டுவார்" என்றார்.

More from Filmibeat

Read more about: vadivelu வடிவேலு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X