சூரி நாயகனாக நடிக்கும் படம்.. வெற்றிமாறன் படத்தில் பாரதிராஜா திடீர் விலகல்.. இணைந்தார் பிரபல நடிகர்!

By

சென்னை: தனது உடல்நிலையை காரணம் காட்டி வெற்றிமாறன் படத்தில் இருந்து இயக்குனர் பாரதி ராஜா விலகியுள்ளார்.

Recommended Video

Vetrimaran Soori combo made Major Changes in Story | மீண்டும் ஒரு நாவல்

தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' ஹிட்டுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை தொடங்க இருந்தார் வெற்றிமாறன்.

சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

குளறுபடிகள் நடந்தன

குளறுபடிகள் நடந்தன

கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன. இதனால், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றி மாறன் முடிவு செய்தார். நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி சூரி நடிப்பில் படமாக்க இருந்தார்.

கதையை மாற்றினார்

கதையை மாற்றினார்

அது அரபு நாடொன்றில் வேலை பார்க்கும் ஒருவரின் கதை. துபாய்க்கு ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், வெளிநாடு சென்று படமாக்கும் வாய்ப்பில்லை என்ற சூழல் ஏற்பட்டது. இதனால் சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றினார்.

ஜெயமோகனின் துணைவன்

ஜெயமோகனின் துணைவன்

சிறுகதை மற்றும் நாவல்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். லாக்கப் நாவலை, விசாரணை என்ற பெயரில் படமாக்கிய அவர், வெக்கை நாவலை 'அசுரன்' ஆக்கினார். வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்க இருக்கிறார். இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை படமாக்குகிறார்.

பாரதிராஜா விலகல்

பாரதிராஜா விலகல்

இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்கியது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து பாரதிராஜா விலகியுள்ளார்.

இணைந்தார் கிஷோர்

இணைந்தார் கிஷோர்

அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், தனது உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று பாரதிராஜா விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரக்டரில் இப்போது கிஷோர் நடித்து வருகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பவானிஶ்ரீ நாயகியாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X