முதல்ல ஓம்... இப்ப மீண்டும் ஒரு மரியாதை... பிப்ரவரியில் ரிலீஸ் ஆகிறது பாரதிராஜா படம்

By

சென்னை: பாரதிராஜா இயக்கி நடித்துள்ள மீண்டும் ஒரு மரியாதை படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இயக்குனர் பாரதிராஜா கடந்த சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்த படம், ஓம். இதை பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த நிர்மல்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு சலீம் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்தில் இருந்து விலகினார்.

நடிகை மவுனிகா

நடிகை மவுனிகா

இதையடுத்து பாரதிராஜாவே ஓம் படத்தை இயக்கி நடித்தார். படத்தை அவரது மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை மவுனிகா, நடிகர் ஜோ மல்லூரி, நடிகை ராசி நட்சத்திரா உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

முழு நீள கேரக்டர்

முழு நீள கேரக்டர்

1980-ம் ஆண்டில் கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக நடித்தார் பாரதிராஜா. இந்தப் படத்தை நிவாஸ் இயக்கினார். படமும் பாடல்களும் சிறப்பாக அமைந்தும் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்குப் பிறகு முழு நீள கேரக்டரில் அவர் நடிக்கவில்லை. இப்போது கடந்த சில வருடங்களில் குணசித்திர வேடங்களில் அவர் நடித்துவருகிறார்.

வெளிநாட்டில் ஷூட்டிங்

வெளிநாட்டில் ஷூட்டிங்

இந்நிலையில் அவர் முழு நீள கேரக்டரில் நடித்துள்ள படம், ஓம். வயதான தந்தைக்கும் அவர் மகனுக்குமான பாசப் போராட்டத்தைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்துள்ளது. ஐரோப்பியாவில் வாழும் இலங்கை தமிழர்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் ஒரு மரியாதை

மீண்டும் ஒரு மரியாதை

இந்நிலையில், இந்தப் படத்தில் ரிலீஸ் தள்ளிப் போய்கொண்டே வந்தது. படம், கடந்த வருடமே வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, இதன் டைட்டிலை, 'மீண்டும் ஒரு மரியாதை' என்று மாற்றி வைத்தனர். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படம் சூப்பர் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகம் போலான கதையை கொண்ட படம் என்பதால், இந்த டைட்டிலை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X