ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் படத்தை பார்த்து பாராட்டிய பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ், சேரன்!

சென்னை: விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ இன்று நடைபெற்றது.

படத்தை பார்த்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ் மற்றும் சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் ப்ளூ சட்டை மாறனை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

டிசம்பர் 10 ரிலீஸ்

டிசம்பர் 10 ரிலீஸ்

டிசம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படம் சற்றே தள்ளிப் போய் வரும் டிசம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட இந்த திரைப்படம் சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்று வெளியாக போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பாரபட்சம் இன்றி அதிரடியாக அவர் செய்யும் விமர்சனங்களுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எப்போதுமே அதிகளவில் இருந்து கொண்டே வருகிறது. விமர்சகராக இருந்து வந்த ப்ளூ சட்டை மாறன் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

ப்ரிவ்யூ ஷோ

ப்ரிவ்யூ ஷோ

விரைவில் வெளியாகவுள்ள ஆன்டி இண்டியன் திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ இன்று சென்னையில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகும் முன்னதாக தணிக்கை குழு தரப்பிலேயே பல எதிர்ப்புகளை சந்தித்த நிலையில், படம் வெளியானால் யாரெல்லாம் பிரச்சனைகளை கிளப்ப போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இயக்குநர்கள் பாராட்டு

இயக்குநர்கள் பாராட்டு

ப்ளூ சட்டை மாறனின் அரசியல் நய்யாண்டி திரைப்படமான ஆன்டி இண்டியன் திரைப்படத்தை பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ் மற்றும் சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். தயாரிப்பாளர் ஆதம் பாவா மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறனை இயக்குநர்கள் வெகுவாக பாராட்டிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கட்டியணைத்த பாரதிராஜா

கட்டியணைத்த பாரதிராஜா

ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படத்தை பார்த்து மிகுந்த ஆனந்தம் அடைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா ப்ளூ சட்டை மாறனை கட்டியணைத்து பாராட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. படத்தை பார்த்து அனைத்து இயக்குநர்களும் ரொம்பவே திருப்தி அடைந்துள்ளனர் என்றே இந்த புகைப்படங்களை பார்க்கும் போது தெரிகிறது. டிசம்பர் இறுதியில் இன்னுமொரு சிறப்பான தமிழ் படம் வெளியாக போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

யாரெல்லாம் விமர்சிக்க போகிறார்களோ

யாரெல்லாம் விமர்சிக்க போகிறார்களோ

கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களை பாரபட்சம் இன்றி பங்கம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படம் வலுவான திரைக்கதையுடன் உருவாகி இருந்தாலும் அவரது ஹேட்டர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து தள்ளப் போவதாக தொடர்ந்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். டிசம்பர் 10ம் தேதி படம் வெளியான பின்னர் நிலைமை எப்படி மாறுகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X