குருநாதர் பாரதிராஜா மறைந்த 2 வாரத்தில் பாக்யராஜும் போயிட்டாரே.. அவர்களுக்கு இடையில் நடந்த அந்த விஷயம்?

சென்னை: இந்த ஜூன் மாதம் தமிழ் சினிமா உலகத்திற்கு மிகவும் வலிமிகுந்த மாதமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த ஜூன் 10ஆம் தேதி, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், ஜூன் 27ஆம் தேதி அவரது சிஷ்யரும், இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்டவருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல், மொத்தத் திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 73.

பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாக்யராஜ், கொஞ்சம் கோபக்காரர்தான். திறமை இருக்கும் இடத்தில் தார்மீகக் கோபமும் இருக்கும் அல்லவா? பாரதிராஜா மட்டும் என்ன சளைத்தவரா? ஒருமுறை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பாக்யராஜை வெளியேறச் சொல்லியுள்ளார் பாரதிராஜா.

பாரதிராஜா - பாக்யராஜ் இடையே நடந்த 'அந்த' விஷயம்?: இந்நிலையில், பாரதிராஜா புதிய தயாரிப்பு நிறுவனம் (Production Company) தொடங்கும் காலகட்டத்தில், அவரிடம் உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார் மனோபாலா. அப்போது அங்கு பாக்யராஜ் இல்லாதது குறித்துக் கேட்டது மட்டுமன்றி, "பாக்யராஜ் போன்ற திறமையானவரை அருகில் வைத்துக்கொள்ளக் கூடாதா?" என்று பாரதிராஜாவிடமே வாதிட்டுள்ளார். அதன் பின்னர், பாக்யராஜைச் சந்தித்துப் பேசி, சமாதானப்படுத்தி, ஒருவழியாக மீண்டும் அவரைப் பாரதிராஜாவுடன் சேர்த்து வைத்துள்ளார் மனோபாலா.

Bharathiraja and Bhagyaraj Passed Away Within Weeks The Rift and Reunion That Defined Their Bond

பிரியாத பந்தம்: அதன் பிறகு இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் பாக்யராஜைக் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தவரும் பாரதிராஜாதான். பாரதிராஜாவின் திரையுலக வாழ்க்கையில் பாக்யராஜ் மிகவும் முக்கியமானவர்; அதேபோல், பாக்யராஜின் வாழ்க்கையில் பாரதிராஜா ஒரு கலங்கரை விளக்கம் போன்றவர்.

பெரும் சோகம்: இவர்கள் இருவரும் இரண்டு வார கால இடைவெளியில் மறைந்தது, மொத்தத் திரையுலகையும் ஈடுகட்ட முடியாத அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X