விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. உதயநிதி ஸ்டாலின், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அஞ்சலி
சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில், அவரது உடல் தற்போது டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் விஜய் ஆண்டனியின் மகளின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தள்ளாத வயதிலும் சற்றுமுன் விஜய் ஆண்டனியின் மகள் மறைவை அறிந்த இயக்குநர் பாரதிராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார். உதயநிதி ஸ்டாலினும் விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் இரங்கல்: விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவின் மகள் மீராவின் மரணச் செய்தி என் நெஞ்சையே உலுக்கி விட்டது. இந்த சிறு வயதில் இப்படியொரு திடீர் மரணத்தை யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், விஜய் ஆண்டனியின் அவரது குடும்பத்தினரையும் தேற்ற முடியாது. இதில், இருந்து அவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என நடிகர் சரத்குமார் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனிருத் முதல் கவின் வரை: இசையமைப்பாளர் அனிருத் முதல் நடிகர் கவின் வரை பலரும் விஜய் ஆண்டனிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக ஆறுதல் கூறி வருகின்றனர். விஜய் ஆண்டனி வாழ்வில் தொடர்ந்து சோகங்கள் நிறைந்து காணப்படுவது வேதனை அளிப்பதாக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு மீரா விஜய் ஆண்டனியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி: விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு மீராவின் உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ள காட்சிகள் தற்போது தீயாக பரவி வருகின்றன.
பாரதிராஜா நேரில் அஞ்சலி: 80 வயதை கடந்து விட்ட நிலையிலும், விஜய் ஆண்டனியின் மகள் மீரா மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த இயக்குநர் பாரதிராஜா விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு விரைந்து வந்து அஞ்சலி செலுத்தி விட்டு விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும், பல சினிமா பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











