பாண்டிய நாடு படத்தில் விஷால் அப்பாவான பாரதிராஜா

சுசீந்திரன் இயக்கும் படம் பாண்டியநாடு. இப்படத்தின் பெரும்பகுதி மதுரையை சுற்றி நடக்கிறது. இதில் விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்..
பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு அப்பாவாக ஒரு நல்ல வலுவான நடிகரை தேடி வந்தார் டைரக்டர். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தவருக்கு பாரதிராஜாவை நடிக்க வைக்க எண்ணம் தோன்றியது. இதுதொடர்பாக பாரதிராஜாவிடம் பேசியபோது முதலில் தயங்கினார். பின்னர் என்னை நீ நடிக்க வைத்து விடுவாயா?'' என்று மட்டும் பாரதிராஜா கேட்டுள்ளார், அதற்கு சுசீந்திரனும் நடிக்க வைத்து விடுவேன் என்று சொல்ல சம்மதம் சொல்லிவிட்டார் பாரதிராஜா. தனக்கு அப்பாவாக பாரதிராஜா நடிப்பதை மிகப் பெருமையாக கருதுவதாகவும், அந்த கேரக்டருக்கு அவர் தான் பொருத்தமானவர் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார்.
விரைவில் பாரதிராஜா, விஷால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. விஷால் பிலிம் பேக்டரி எனும் பெயரில், நடிகர் விஷால் சொந்தமாக இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications