twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோபப்படுவதா? அறியாமை கண்டு சிரிப்பதா? திலீபனின் வாழ்க்கையை படமாக எடுப்பீர்களா? பாரதிராஜா கேள்வி

    By
    |

    சென்னை: தம்பி திலீபனின் வாழ்க்கை கதையை படமாக எடுத்தால் மொத்த திரையுலகமும் இலவசமாக பணியாற்ற காத்திருக்கிறோம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

    Recommended Video

    Shame on Vijay Sethupathi • விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் எச்சரிக்கை

    இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

    படத்துக்கு '800' என தலைப்பு வைத்துள்ளனர். 'கனிமொழி' படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

    முரளிதரன் நம்பிக்கைத்துரோகி.. அவர் கதையில் நடிப்பதை தவிருங்கள்.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம் முரளிதரன் நம்பிக்கைத்துரோகி.. அவர் கதையில் நடிப்பதை தவிருங்கள்.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

    முரளிதரன் பயோபிக்

    முரளிதரன் பயோபிக்

    விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி (#ShameOnVijaySethupathi) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

    தவிர்க்க பாருங்கள்

    தவிர்க்க பாருங்கள்

    பல்வேறு தமிழ் அமைப்புகளும் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம், காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என்று கூறியிருந்தார்.

    அரசியல் படமில்லை

    அரசியல் படமில்லை

    இந்நிலையில் அந்த படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அவர் அந்த அறிக்கையில், கேள்வி எழுப்பியுள்ளார். அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன். 800 - திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.

    கோபப்படுவதா? சிரிப்பதா?

    கோபப்படுவதா? சிரிப்பதா?

    இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக்காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றைப் புரட்டிபாருங்கள்.

    போராளியின் தியாகம்

    போராளியின் தியாகம்

    பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது.

    திலீபன் வாழ்க்கை

    திலீபன் வாழ்க்கை

    உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு, காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா. ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    English summary
    Bharathiraja questions '800' producer, 'Will you film the life of Dileepan?'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X