மகனின் இறுதி ஊர்வலத்தில் நடக்க முடியாமல் தடுமாறிய பாரதிராஜா.. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது!
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல், நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது. மகனின் இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜாவால் நடந்து கூட போக முடியவில்லை. அவரை பலரும் கைத்தாங்கலாக தாங்கி அழைத்துச் செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மகனை இழந்த துயரம், வயது மூப்பு என பாரதிராஜாவின் நிலை யாருக்கும் வரக்கூடாது என பார்ப்பவர்கள் கூறி வருகிறார்கள்.

பாரதிராஜா தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் ஒருவர்தான், நெப்போலியன். மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நெப்போலியன் இரங்கல் குறிப்பு வெளியிட்டார். அதில். “ ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் என்றால், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி தான். நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா நேற்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய எங்கள் குருநாதர் இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் அன்பு மகன் மனோஜ் மறைவு செய்தி கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியுற்றோம்...! மிகவும் வேதனையாக இருக்கிறது..! இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மலேசியாவில் வசிக்கும் எங்கள் குருநாதரின் மகள் ஜனனி வீட்டிற்கு சென்று இருந்தோம்..!
அப்போது வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் விசாரித்தோம்..! அப்போது ஜனனி, அவரது அண்ணன் மனோஜ் உடல்நிலை பற்றி விவரித்தார் ..! இப்பொழுது நன்றாக இருக்கிறார் என்று சொன்னார்..! அதற்குள் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை..! அவர்கள் குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை..!எங்கள் குருவிற்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும்,அவரது உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரு. பாரதிராஜா அவர்களின் கோடானு கோடி ரசிகர்களுக்கும், அன்பு தம்பி மனோஜின் ரசிகர்களுக்கும், எங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!” என பதிவிட்டிருந்தார்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டது. மனோஜின் இறுதி ஊர்வலத்தில் பாரதிராஜாவால் நடக்கவே முடியவில்லை. அவரை இறுதி ஊர்வலத்தில் பலரும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். பாரதிராஜாவுக்கும் தற்போது 83 வயது ஆகிவிட்டதால், வயது மூப்பு மற்றும் மகனை இழந்த புத்திர சோகம் என அவரை மொத்தமாகவே நிலைதடுமாறச் செய்துவிட்டது. அவரது இறுதி ஊர்வலம் முடிந்து மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, தரையில் அமர்ந்து கதறினார். அவரை அருகில் இருந்தவர்கள் தேற்ற முயற்சி செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது மட்டும் இல்லாமல், பாரதிராஜாவின் இந்த நிலையைப் பார்த்த பலரும் யாருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது எனக் கூறி வருகிறார்கள். மனோஜ்க்கு இறுதிச் சடங்குகளை அவரது மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் செய்தனர்.


Click it and Unblock the Notifications











