twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெரட்டிட்டீங்கய்யா....! - 6 அத்தியாயம் படம் பார்த்த பாரதிராஜா பாராட்டு

    By Shankar
    |

    6 அத்தியாயம் படம் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, அந்தப் படத்தின் 6 இயக்குநர்களையும் பாராட்டியுள்ளார்.

    '6 அத்தியாயம்' திரைப்படம் சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது:

    "பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.. ஆனால் இந்த '6 அத்தியாயம்' படத்தை பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

    வித்தியாச குரூப்பா இருக்கே

    வித்தியாச குரூப்பா இருக்கே

    இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன்.. இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.

    கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டன

    கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டன

    பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான் பெரிதும் பாராட்டுவேன்.. காரணம் அவர்கள் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள்.. சமீபத்தில் வந்த நம் தமிழ்ப் படங்களில் பல நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த '6 அத்தியாயம்' படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன்.

    நான் செய்யவில்லை

    நான் செய்யவில்லை

    எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம். பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள்.. இவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும் என்று தான் நானே மைக் பிடித்தேன்.

    இழுத்துப் பிடித்து உட்கார வைக்கிறது

    இழுத்துப் பிடித்து உட்கார வைக்கிறது

    இந்த யோசனையே புதிதாக உள்ளது. தமிழ்சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. 6 அத்தியாயங்களை எப்படி ஒன்று சேர்ப்பது..? ஒரு அத்தியாயம் முடிந்ததுமே எழுந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் முதல் அத்தியாயம் முடியும்போதே இரண்டாம் அத்தியாயத்தை பார்க்கும் விதமாக நம்மை இழுத்து பிடித்து அமர வைத்து விடும் யுத்தியை இதில் கையாண்டிருக்கிறார்கள்.

    சாதனை

    சாதனை


    இப்படி ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6-வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். இது மிகச்சிறந்த யோசனை. மிகப்பெரிய சாதனையும் கூட. இதுபோல நல்ல கலைஞர்கள் வந்தார்கள் என்றால் தமிழ் திரையுலகை பற்றி உலகம் முழுதும் பேசுவார்கள்.

    குறும்படத்திலேயே இவ்வளவு கெட்டிக்காரத்தனம் காட்டினால், அதை ஒரு முழுநீள திரைப்படத்திலும் நிச்சயம் கொண்டு வரமுடியும்.. உலகளவில் நம் படங்களை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. 6 அத்தியாயம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்," என்றார் பாரதிராஜா

    '6 அத்தியாயம்' பற்றி...

    '6 அத்தியாயம்' பற்றி...

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் '6 அத்தியாயம்'. பல குறும்படங்களை ஒன்றிணைத்து 'அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்' திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குநர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

    6 இயக்குநர்கள்

    6 இயக்குநர்கள்

    கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா' சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயங்களை இயக்கியுள்ளார்கள்.

    நடிகர்கள்

    நடிகர்கள்

    இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்' நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்' விஷ்ணு, ‘பசங்க' கிஷோர், ‘குளிர் 100' சஞ்சய், ‘நான் மகான் அல்ல' வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

    English summary
    Director Bharathiraja has praised 6 Athiyayam movie and crew
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X