Manoj Bharathiraja: மகனோடு பிறந்த நாள் கொண்டாடிய பாரதிராஜா வீடியோ.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்

சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவு குறித்த தகவல்கள் தான் குவிந்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் இன்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாரதிராஜா தனது பிறந்தநாளை மகன் மனோஜ், மனோஜ் மனைவி நந்தனா மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆகியோரோடு கொண்டாடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, கடந்த 1970களில் தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தார். நடிகராக ஆக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னைக்கு வந்தவரை சினிமா, இயக்குநராக மாற்றிவிட்டது. இயக்குநராக தனது முதல் படத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் புரட்டிப் போட்டார். இதுவரை ஸ்டுடியோக்களுக்கு உள்மூழ்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, வயல் வரப்புகளுக்கும், வீட்டுத் திண்ணைகளுக்கும் தோப்புத் துறவுகளும் அழைத்து வந்தவர் பாரதிராஜா. தனது படங்களின் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

Bharathiraja Celebrates His Birthday With Son Manoj Bharathiraja Throwback Video goes Trending

பாரதிராஜா: தனது 83 வது வயதிலும் நடிகராக நடித்து வருகிறார். இப்படியான பாரதிராஜா அவர் இயக்குநராக இருந்தபோது, தமிழ் சினிமாவில் பல திறமையான கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இப்படி இருக்கும்போது அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Bharathiraja Celebrates His Birthday With Son Manoj Bharathiraja Throwback Video goes Trending

பிறந்தநாள் வீடியோ: இந்நிலையில் பாரதிராஜா தனது பிறந்த நாளை அவரது மகன் மனோஜ் பாரதிராஜா, மனோஜ் மனைவி நந்தனா, அவர்களின் குழந்தைகள் இருவருடன் பிறந்த நாள் கொண்டாடினார். கேக் வெட்டிய பாரதிராஜா, அதனை முதலில் தனது பேத்திகளுக்கு ஊட்டி விட்டார். அதன் பின்னர் மகன் மனோஜ்க்கு கேக் ஊட்டி விடும் போது பாரதிராஜா நிலைதடுமாறினார். உடனே அருகில் இருந்த மனோஜ், பாரதிராஜாவை பிடித்துக் கொண்டார். உடனே அந்த இடத்தில், ' இவனுக்கு ஊட்டும்போது மட்டும் தடுமாறுது' எனக் கூற, அனைவரும் சிரித்தார்கள். இது தொடர்பான பழைய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இறுதிச் சடங்கு: பாரதிராஜா குறித்து மனோஜ் பல பேட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கூறியுள்ளார். குறிப்பாக, தான் இயக்கிய முதல் படத்தில் அப்பா பாரதிராஜாவும் நடித்திருந்தார். ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து இரவு ஹோட்டலில் தூங்கிக் கொண்டு இருந்தோம். அப்போது இரவில் எழுந்த, அப்பா, எனது கால்களை பிடித்து விட்டார். நான் தூங்கிக் கொண்டு இருந்த நான் உடனே எழுந்து விட்டேன். அதற்கு அப்பா, என்னடா கால் வலிக்குதா? எனக்கு தெரியும்டா இந்த வேலையில கஷ்டம் அதிகம்னு எனக் கூறினார். நான் அழுதே விட்டேன் என பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மறைந்த மனோஜ் பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் தமிழ்நாடு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மனோஜ்க்கு இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது.

Bharathiraja Celebrates His Birthday With Son Manoj Bharathiraja Throwback Video goes Trending

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X