twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாநாடு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்ந்த விவகாரம்.. டி ராஜேந்தருக்கு பாரதிராஜா கடும் கண்டனம்!

    |

    சென்னை: மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது வழக்கு தொடர்ந்த டி ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான படம் மாநாடு. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்தார். பெரும் இழுபறிக்கு பின்னர் கடந்த 25ஆம் தேதி ரிலீஸானது.

    இந்நிலையில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமையைத் தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முற்பட்டதாகக் கூறி டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    பாரதிராஜா கடிதம்

    பாரதிராஜா கடிதம்

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பாரதிராஜா டி.ராஜேந்தருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் சம்பந்தமாகத் தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பலமுறை தலையிட்டுப் படம் சுமுகமாக வெளியாக உதவியது தாங்கள் அறிந்ததே.

    வழக்கு தொடுத்ததை கேட்டு அதிர்ச்சி

    வழக்கு தொடுத்ததை கேட்டு அதிர்ச்சி

    படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று சிலம்பரசனின் வியாபாரமும், அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துகள். இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்தத் திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

    உத்தரவாதம் தர முனவந்தீர்கள்

    உத்தரவாதம் தர முனவந்தீர்கள்

    'மாநாடு' வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்தத் திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்குச் சான்று. படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வரத் தாமதமானாலும் பரவாயில்லை, படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முனவந்தீர்கள்.

    தவறான முன் உதாரணம்

    தவறான முன் உதாரணம்

    படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திருப்பித் தருகிறார். ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துகளுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?

    எந்தவிதத்தில் நியாயம்?

    எந்தவிதத்தில் நியாயம்?

    ஒரு அமைப்பில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயன்றது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?

    உங்கள் நிலை என்னவாகும்?

    உங்கள் நிலை என்னவாகும்?

    இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்? வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்குப் போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது''. இவ்வாறு அந்தக் கடிதத்தில் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Film Current Producers Association President Bharathiraja writes letter to T Rajender. Bharathiraja condemns T Rajender for filing case against Maanaadu producer Suresh Kamatchi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X