En Uyir Thozhan Babu - என் உயிர் தோழன் பாபு உயிரிழப்பு.. உச்சக்கட்ட விரக்தியில் பாரதிராஜா இரங்கல்

சென்னை: En Uyir Thozhan Babu (என் உயிர் தோழன் பாபு) தான் அறிமுகப்படுத்திய ஹீரோ பாபு உயிரிழந்ததை அடுத்து இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

பாரதிராஜா அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர் பாபு. கடந்த 1990ஆம் ஆண்டு அவர் இயக்கிய என் உயிர் தோழன் படத்தின் மூலம்தான் நடிகராக அறிமுகமானார். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. எப்போதும் தனது உதவி இயக்குநர்களையும் நடிகராக இண்ட்ரோ செய்யும் வழக்கம் உடையவர் என்பதால் பாரதிராஜா இதையும் செய்ததாக கருதப்படுகிறது.

Bharathiraja Condolence To En Uyir Thozhan Babu Dead

முதல் படம்: பாபு அறிமுகமான முதல் படமான என் உயிர் தோழன் படம் ஓரளவுதான் வரவேற்பைப் பெற்றது. ஆனால் கிராமத்து பாணியில் இருந்த அவரது முகமும், நடிப்பும் கண்டிப்பாக அவருக்கு நல்ல எதிர்காலத்தை சினிமாவில் பெற்றுக்கொடுக்கும் என்று நம்பப்பட்டது. அதன்படிதான் அவருக்கு என் உயிர் தோழன் படத்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

அடுத்தடுத்த படங்கள்: அதன்படி அவர் பொண்ணுக்கு சேதி வந்தாச்சு, தாயம்மா, பெரும்புள்ளி என்று வரிசையாக படங்களில் நடித்தார். ஐந்தாவது படமாக மனசார வாழ்த்துங்களேன் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்தபோது ஒரு ஆக்‌ஷன் காட்சியில் உயரமான இடத்திலிருந்து குதிக்க முடிவு செய்தார்.படக்குழு எவ்வளவு தடுத்தும் அவர் கேட்காமல் குதித்தார். அப்போது அவருக்கு பலத்த விபத்து ஏற்பட்டது.

முதுகு எலும்பு: அந்த விபத்தில் பாபுவின் முதுகு எலும்பு உடைந்துபோனது. இதனால் கடந்த 30 வருடங்களாகவே அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். எப்படியாவது அவரை நடக்க வைக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. இந்த சூழலில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் சென்னையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாரதிராஜா உயிரிழப்பு: இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில், "திரைத்துறையில் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்திருக்க வேண்டியவர். படப்பிடிப்பில் நடந்த விபத்தால் 30 வருடங்களாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த என் உயிர் தோழன் பாபுவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டிருக்கிறார். அண்மையில்கூட பாரதிராஜா பாபுவை நேரில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X