பாசத்துக்குரியவனே... உன் மறைவு பேரதிர்ச்சி... கூல் ஜெயந்த் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

சென்னை: பிரபல நடன இயக்குநரான கூல் ஜெயந்த் மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது என இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dance Master Cool Jayanth காலமானார் | Kadhal Desam, Priyamanaval

தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவர் கூல் ஜெயந்த். ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குரூப் டான்ஸராக அறிமுகமானார்.

பின்னர் பிரபுதேவா,ராஜசுந்தரம் மாஸ்டர்களின் நடனக் குழுவில் உதவி நடன இயக்குனராக 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றினார் கூல் ஜெயந்த்.

நடன இயக்குநராக அறிமுகம்

நடன இயக்குநராக அறிமுகம்

1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை பாடலின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடன இயக்குனராக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் கூல் ஜெயந்த்.

முன்னணி நடிகர்களின் படங்கள்

முன்னணி நடிகர்களின் படங்கள்

கூல் ஜெயந்த் கலாபாவன் மணி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான பாம்பூ பாய்ஸ் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். அதன் பிறகு மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்கள் பலவற்றுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

வெற்றி படங்களில் நடனம்

வெற்றி படங்களில் நடனம்

அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் இடம்பெற்ற ஏப்ரல் மாதத்தில், , குஷி படத்தில் இடம்பெற்ற மொட்டு ஒன்று.., ப்ரியமானவளே படத்தில் இடம்பெற்ற வெல்கம் பாய்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடனம் அமைத்து கொடுத்து இருக்கிறார் கூல் ஜெய்ந்த்.

இன்று காலை மரணம்

இன்று காலை மரணம்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் கூல் ஜெய்ந்த். இந்நிலையில் இன்று அதிகாலை உடல் நிலை மோசமடைந்து மரணமடைந்துள்ளார் நடன இயக்குநர் கூல் ஜெயந்த். கூல் ஜெயந்த் மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உன் மறைவு பேரதிர்ச்சி

உன் மறைவு பேரதிர்ச்சி

அந்த வகையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜா கூல் ஜெயந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
பாசத்துக்குரியவனே.. உன் மறைவு பேரதிர்ச்சிடா..
மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த இரங்கல்.. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X