பாரதிராஜா குடும்பத்தில் பிரச்னை.. மகனோடு பேசவே இல்லை.. அதுதான் அவரை அப்படி ஆக்கியது.. ராதாரவி ஓபன்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் இமயத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி அடக்கம் செய்யவிருக்கிறார்கள். இந்நிலையில் ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கும் விஷயங்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
மகன் மனோஜ் கடந்த வருடத்தில் உயிரிழந்ததை அடுத்து பாரதிராஜாவும் ரொம்பவே நொடிந்து போனார். அவரை எப்படியாவது பழைய நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என கங்கை அமரன் உள்ளிட்ட சிலர் முயன்றார்கள். இருப்பினும் மகனின் இழப்பு அவருக்கு உடல்நல குறைவையும் ஏற்படுத்திவிட்டது. தன்னுடைய மகன் இரண்டு பெண் பிள்ளைகளை விட்டுவிட்டு போய்விட்டானே; இந்த இள வயதில் போய்விட்டாரே என நொந்து போயிருந்தார்.

உயிரிழந்த பாரதிராஜா: உடல்நல குறைவால் முதலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். ராதிகா, வைரமுத்து உள்ளிட்டோர் எல்லாம் நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார்கள். ராதிகா சென்றபோது, 'தாய் கிழவி படத்துக்கு உனக்கு தேசிய விருது கிடைக்கும்' என உறுதியளித்தார். இப்படி இருந்ததால் அவர் கண்டிப்பாக பழையபடி மீண்டுவிடுவார் என எல்லோருக்கும் நம்பிக்கை பிறந்தது. சூழல் இப்படி இருகக் நேற்று காலை உயிரிழந்தார்.
இன்று இறுதி மரியாதை: நேற்று மாலை நீலாங்கரை வீட்டிலிருந்து வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்; பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. முழு அரசு மரியாதை செலுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் இயக்குநர் இமயத்துக்கு இறுதி மரியாதை செலுத்தவிருப்பதை நினைத்து கலங்கி போயிருக்கிறார்கள்.
வீட்டில் பிரச்னை?: இதற்கிடையே சென்னை வீட்டில் அவரது உடல் இருந்தபோது; பாரதிராஜாவின் மனைவியிடம் கங்கை அமரன், 'எல்லோரும் விட்டுட்டு ஓடிட்டீங்க.. அனாதையாக போயிருக்காரு' என கத்தினார். அதை பார்த்த ரசிகர்களோ, 'ஒருவேளை பாரதிராஜா யாரும் இல்லாமல் தனிமையில்தான் இறந்தாரோ; என கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். அதுகுறித்து கங்கையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'அதெல்லாம் எங்கள் குடும்ப பிரச்னை. அதை போட வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை' என கூறிவிட்டு என்றார்.
ராதாரவி பேட்டி: இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "மகன் மனோஜ் இறந்தது அவரை ரொம்ப பாதித்துவிட்டது. முக்கியமாக மகனோடு அவர் பேசாமல்தான் இருந்தார். இப்படி பேசாமல் இருந்தபோது மகன் போய்விட்டானே என உடைந்து போய்விட்டார். ஒரு மனிதன் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அவரும் செய்திருக்கிறார்.மிகச்சிறந்த இயக்குநர் அவர். ஆனால் குடும்பத்துக்குள் அவருக்கு பிரச்னைகள் இருந்தன. அதனால்தான் அவர் படம் இயக்குவதையே நிறுத்திவிட்டதாக நினைக்கிறேன்.
இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. அவர் மிகப்பெரிய மனிதர். நல்ல கற்பனை வளம் உள்ளவர். அவருக்கு 85 வயது. வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்துவிட்டார். வாங்காத விருதுகள் இல்லை. பழகாத தலைவர்கள் இல்லை. நல்ல இதயம் உள்ள மனிதர். அனைவரையும் வருத்தத்துக்கு ஆளாக்கிவிட்டு சென்றுவிட்டார். நான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். செல்ல முடியவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
