சூர்யாவின் சூரரைப்போற்றை புகழ்ந்து தள்ளிய இயக்குநர் பாரதிராஜா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

சென்னை: சூரரைப்போற்று திரைப்படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள படம் சூரரைப்போற்று.

இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ், நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை..

ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை..

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

நேற்றிரவு ரிலீஸ்

நேற்றிரவு ரிலீஸ்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்க தாமதமானதால் அமேஸான் பிரைமில் நேற்றிரவு சூரரைப்போற்று திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

Surya 'You Won' Soorarai Pottru Celebrity Review | Sudha Kongara, Surya
பாரதிராஜா புகழாரம்..

பாரதிராஜா புகழாரம்..

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை புகழ்ந்து டிவிட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார்
இசையில்
காற்றாய்
கவிதையாய்
கனலாய்..
காட்சிக்கு காட்சி
என் கண்களை
தெறிக்க விட்ட சுதா மற்றும்
மார்க்கண்டேயரின்
தவப்புதழ்வன் சூர்யாவே
உங்கள் வியர்வை மழை
உங்களை சிகரத்தில்
சிறகடிக்கவைத்துவிட்டது
வாழ்த்துகள்..
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்கூட்டியே ரிலீஸ்

முன்கூட்டியே ரிலீஸ்

மேலும் இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் சூர்யா மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும்
வாழ்த்துக்களும்.. என்றும் இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ளார். சூரரைப்போற்று திரைப்படம் நேற்றிரவு இணையத்தில் லீக்கானதால் முன்கூட்டியே அமேஸானில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X