என்ன இப்படி சொல்லிட்டாப்ல.. நஷ்டம் வரும்.. 'ஆத்தா'வை கைவிட்டார் இயக்குனர் பாரதிராஜா!

By

சென்னை: ஆத்தா என்ற படத்தை இயக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ராசி நட்சத்திரா

ராசி நட்சத்திரா

இதில், அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மவுனிகா, ஜோ மல்லூரி, ராசி நட்சத்திரா உட்பட பலர் நடித்திருந்தனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. ஆனால், கவனிக்கப்படவில்லை.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இதற்கிடையே அவர் ஆத்தா என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இதன் ஷூட்டிங்கை கொரோனா பரவல் தீவிரம் குறைந்த பிறகு தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையான இதை பாரதிராஜா இயக்க இருந்தார்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. கடைசியாக இருவரும் நாடோடி தென்றல் படத்தின் இணைந்திருந்தனர். இதனால், 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது. அதோடு வைரமுத்துவும் இந்த கூட்டணியில் இணைவதாகத் தகவல்கள் வெளியாயின.

படமாக்கி இருந்தால்

படமாக்கி இருந்தால்

இந்நிலையில், அந்தப் படத்தைக் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார் பாரதிராஜா. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம்.

கைவிடப்படும் ஆத்தா

கைவிடப்படும் ஆத்தா

கால சூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்தக் கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது,
ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிடப்படுகிறது.

புதிய கூட்டணி

புதிய கூட்டணி

புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் இந்த முடிவு என்று அவர்கள் சோசியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X