நடிகர் சங்க பெயர் மாற்றம்...பாரதிராஜாவுக்கு திடீரென குவியும் ஆதரவு
சென்னை : உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் கோலிவுட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ் நடிகர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயரிடப்பட்டது. சினிமா நடிகர்களின் ஒற்றுமையை காட்ட இப்படி பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் இந்த பெயரை மாற்றி, மற்ற மொழிகளில் இருப்பதை போலவே தமிழிலும், தமிழ் நடிகர் சங்கம் என பெயரிட வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா வெகு காலமாக குரல் கொடுத்து வருகிறார். தமிழ் அடிப்படையில் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்.
பாரதிராஜாவிற்கு குவியும் ஆதரவு
இந்நிலையில் பாரதிராஜாவின் இந்த கோரிக்கையை வைத்து ட்விட்டரில் விவாதம் ஒன்று நடத்தப்பட்டது. ரசிகர்கள் பலர் பாரதிராஜாவின் கோரிக்கை சரியானது தான் என ஆதரவு குரல் கொடுத்தனர்.
தமிழ் நடிகர் சங்கம் வேணும்
இந்நிலையில் WeNeed_TamilActorsAssociation என்ற ஹேஷ்டாக் இன்று காலை முதல் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது. அதே போன்று இனி வரும் காலங்களில் தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நடிகர்களே தமிழ் நடிகர் சங்கத்தை நிர்வாகிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
தமிழுக்கு இருந்தா என்ன
மற்ற மொழி நடிகர்களுக்கென தனி நடிகர் சங்கம் இருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் இருக்கக் கூடாது. தமிழ் நடிகர்கள் சங்கம் மட்டுள் ஏன் தென்னிந்திய நடிகர் சங்கம் என பெயரிட வேண்டும் என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரகாஷுக்கு எதிர்ப்பு
பாரதிராஜா கோரிக்கை வைத்ததால் மட்டுமல்ல, தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











