விஜய் சேதுபதிக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? வெற்றிமாறன் மீது கோபப்பட்ட பாரதிராஜா!
சென்னை : விஜய்சேதுபதி நடித்த வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் பாரதிராஜா தான் நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வெற்றிமாறன் அதை மாற்றியதால் பாரதிராஜா அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை
இயக்குநர் வெற்றிமாறனின் படம் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக சமுதாயத்திற்கு ஏதோ ஒரு கருத்தை சொல்வதாக இருக்கும் அந்த வகையில், காவல்நிலையத்தில் நடக்கும் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது விடுதலை. கதை தொடங்கும் போதே ரயில் விபத்தை அப்பட்டமாக கண் முன் காட்டி பார்வையாளர்களை இருக்கையோடு இருக்கையாக உறையவைத்துவிட்டார் வெற்றி மாறன்.

இனி விடுதலை சூரி
இத்தனை நாட்களாக நகைச்சுவையில் கலக்கி, பரோட்டா சூரி என அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்த சூரிக்கு, இனி விடுதலை சூரி என பட்டமே கொடுக்கலாம். இந்த அளவுக்கு காதல், ரொமான்ஸ், இரக்கம்,பணிவு, டூப்பே இல்லாத சண்டை என ரவுண்டு கட்டி நடித்து உள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடி வருகின்றனர்.

பாரதிராஜாவிடம் தான் முதல் சாய்ஸ்
இந்நிலையில் வலைபேச்சு மிஸ்மி அளித்துள்ள பேட்டியில், விடுதலைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜய் சேதுபதி ரோலில் நடிக்க பாரதிராஜாவிடம் தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கதையை கேட்ட பாரதிராஜா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒகே சொல்லிவிட்டார். இதையடுத்து, லொகேஷன் பார்த்துட்டு வந்த பிறகு வெற்றிமாறன் பாரதிராஜாவிடம், படப்பிடிப்பு சத்தியமங்களம் வனப்பகுதியில் நடப்பதால் உங்களால் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து பாரதிராஜாவும் ஒகே என சொல்லி இருக்கிறார்.

கோபப்பட்ட பாரதிராஜா
ஆனால், விடுதலை படத்தின் ப்ரிவ்யூ ஷோ பார்த்துவிட்டு வந்த பாரதிராஜா, கொஞ்ச நேரம் வெற்றிமாறனிடம் முகம் கொடுத்தே பேசவில்லையாம், வெற்றிமாறன், பாரதிராஜாவிடம் சென்று சார் படம் எப்படி இருக்கு என்று கேட்டுள்ளார். அப்போது பாரதிராஜா யார் நீ... நீ தான் வெற்றிமாறானா என கிண்டலடித்து பேசியிருக்கிறார். பின் கோவம் தணிந்ததும் வெற்றிமாறனை கட்டிப்பிடித்து, முத்தத்தால் அவரை நெகிழவைத்துள்ளார்.

விஜய்சேதுபதி தான் சரி
மேலும், இந்த கதாபாத்திரத்தில் நான் தானே நடித்து இருக்க வேண்டும் என்னை இப்படி அனுப்பிட்டியே என கேட்டு இருக்கிறார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதி தான் சரியாக இருந்தார், என்னால் காடு, மலையில் துப்பாக்கி எடுத்துக்கொண்டு ஓடியிருக்க முடியாது. அந்த வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி பொருந்தி நடித்து இருக்கிறார் என்று வெற்றிமாறனை வெகுவாக பாராட்டி உள்ளார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











