ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்கிறார், ஒரு படத்தை இயக்குகிறார் பாரதிராஜா!
இயக்குனர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முக்கியமான ட்ரெண்ட் செட்டர்.
தான் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல, மிகச் சிறந்த நடிகரும் கூட என தன் நடிப்பின் மூலம் நிருபித்துக் காட்டியவர்.
தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பாரதிராஜா, ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார்.

ஓம்
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில், "ஒம்" என்ற படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டுள்ளோம்.

சிகப்பு ரோஜாக்கள் 2
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தன் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் "சிகப்பு ரோஜாக்கள் 2" என்ற படத்திலும் பாரதி ராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மூன்றாவது படம்
விஎல்எஸ் ராக் சினிமா, வி. சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஒரு புதிய படத்திலும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்.

சினேகனை இயக்குகிறார்
இதற்கடுத்து ஒரு படத்தை இயக்குகிறார் பாரதிராஜா. இதில் பாடலாசிரியிர் சிநேகன் ஹீரோவாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











