திரைப்படக் கல்லூரி தொடங்குகிறார் இயக்குநர் பாரதிராஜா!

By Shankar

'பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்'

இயக்குநர் பாரதிராஜா விரைவில் சர்வதேச அளவிலான திரைப்பட பயிற்சிக் கல்லூரியைத் தொடங்குகிறார்.

இதுகுறித்து இன்று அவரது செய்தித் தொடர்பாளர் அனுப்பியுள்ள அறிக்கை:

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், பல திரைப்படங்களை இயக்கி, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்று தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குநர்களில் தனக்கெனத் தனி பாணியில் கதையுடன் எதார்த்த வாழ்வியலை புகுத்தி தன்னுடைய படைப்புகளினால் தமிழ் சினிமாவிற்கு புதிய திசை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

Bharathiraja to launch a film institue

பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கார்த்திக், ராதா, ரேவதி, கவுண்டமனி, ஜனகராஜ், காஜல் அகர்வால், பிரியா மணி, நெப்போலியன், ரஞ்சிதா, மணிவன்னன், மனோபாலா, நிர்மல் குமார், சித்ரா லக்ஷ்மணன் என்று இவரிடம் திரைத்துறையை கற்று வந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை கூறிக்கொண்டே போகலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி போன்றோரின் நடிப்பில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா என்றால் மிகையல்ல.

திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க "பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்" எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கவுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

Acting
Cinematography
Editing & Compositing
Direction
Sound Design
Editing & VFX
Stunt Direction
Choreography
Production Designer (Art)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது கலைகளின் பயிற்சியினை மாணவர்களுக்கு அளிக்கவுள்ளது "பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்".

இந்நிறுவனத்தின் கௌரவ ஆலேசகர்களாக முத்துக்குமார், துணை வேந்தர் (பாரதிதாசன் பல்கலைக் கழகம்), இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், ப்ரியதர்ஷன், ராஜீவ்மேனன், கங்கை அமரன், கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய தலைமுறையின் முன்னோடிகளாய் விளங்கும் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் அனுபவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து இளைய தலைமுறைக்கு திரைக்கலையை சிறந்த முறையில் பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் விரைவில் வருகிறது 'பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்'.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X