சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை எடுப்பேன்!- பாரதிராஜா
சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
கமல், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்து 1978-ல் ரிலீசாகி, தமிழ் சினிமாவுலகில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் சிகப்பு ரோஜாக்கள். பாரதிராஜா இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஆண்களை மயக்கி ஆசை வலையில் விழ வைக்கும் பெண்களை தேடி பிடித்து கொன்று வீட்டு தோட்டத்தில் புதைக்கும் ஒரு சைக்கோ இளைஞன் பற்றிய கதை இந்தப் படம்.

ரீமேக்
இந்தப் படம் இந்தியில் ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியானது. அதையும் பாரதிராஜாவே இயக்கினார். ஜப்பானிய, ரஷ்ய மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படம் தற்போது ரீமேக் ஆக உள்ளதாக ஒரு பேச்சு நிலவியது. ஆனால் அதனை மறுத்துள்ளார் பாரதிராஜா.

ரீமேக் வேண்டாம்
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், "தமிழில் வெளியான பழைய படங்களை ரீமேக் செய்வது எனக்கு ஏற்படையது அல்ல. ‘16 வயதினிலே' படத்தை இப்போது ‘ரீமேக்' செய்து யாராலும் நடிக்க முடியாது. ஆனால் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம்.

தொடர்ச்சி
‘சிவப்பு ரோஜாக்கள்' படத்தின் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளேன். சிகப்பு ரோஜாக்கள் படத்தை இன்றைய கால கட்டத்தில் உள்ள ஒரு பையன் பார்த்தால் என்ன செய்வான் என்பதை கதையாக உருவாக்கியுள்ளேன்.

என் உயிர்த் தோழன்
அதேபோல என் உயிர் தோழன் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்கவும் எண்ணம் உள்ளது," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











