Bharathiraja: குட்டிக் குந்தவையுடன் பாரதிராஜா.. குடும்பத்துடன் க்ளிக் செய்த சூப்பர் போட்டோஸ்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் குட்டி குந்தவையாக நடித்திருந்த இளம் நடிகை நிலாவை சந்தித்து பாரதிராஜா வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
பொன்னியின் செல்வன் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பில் பாதி கூட பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு இல்லாமல் போனதற்கு காரணம் அந்த படத்தின் மேக்கிங் மட்டுமின்றி முதல் பாகம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பது தான்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிளைமேக்ஸில் நாவலில் இருந்தும் மணிரத்னம் கதையை மாற்றிய நிலையில், முதல் பாகம் செய்த வசூலை 2ம் பாகம் நெருங்கக் கூட முடியவில்லை.
குட்டிக் குந்தவை: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இளம் வயது நந்தினியாக சாரா அர்ஜுன் நடித்த நிலையில், அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் இளம் வயது குந்தவையாக அறிமுக நடிகை நிலா நடித்திருந்தார்.
அருவி உள்ளிட்ட பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த நடிகர் காவ்யா பாரதிக்கும் சீரியல் வில்லி நடிகை கன்யா பாரதிக்கும் பிறந்த மகள் தான் நிலா என்பதை அறிந்ததும் ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

பாரதிராஜா வாழ்த்து: 80 வயதாகும் இயக்குநர் இமயம் பாரதிராஜா குட்டிக் குந்தவையை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்திய புகைப்படங்களை தற்போது கன்யா பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காவ்யா பாரதி, கன்யா பாரதி மற்றும் அவர்களது மகள் நிலாவுடன் என்றுமே யூத்தாக இருக்கும் பாரதிராஜா ஹாஃப் டவுசர் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக பேசி உரையாடும் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த பட ஹீரோயினா?: சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான பறவை கூட்டில் வாழும் மான்கள் பகுதியை பாரதிராஜா இயக்கி இருந்தார். ஆடுகளம் கிஷோர், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வித்தியாசமான காதல் கதையாக அந்த பகுதி உருவாகி இருந்தது.
இந்நிலையில், பாரதிராஜா குட்டிக் குந்தவையை சந்தித்துள்ள நிலையில், அவரது அடுத்த பட ஹீரோயின் கிடைத்து விட்டாரா? என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











