மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா
Recommended Video

சென்னை: மகேந்திரனின் உடலை பார்த்ததும் இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதுள்ளார்.
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டது.

திரையுலக பிரபலங்கள் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முதல் ஆளாக நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை படத்தில் பார்வை இல்லாத பெண்ணாக நடித்திருந்தார் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியுடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
நடிகைகள் ராதிகா சரத்குமார், அர்ச்சனா, வரலட்சுமி, நடிகர்கள் மோகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இசைஞானி இளையாராஜா மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா தூங்குவது போன்று சாந்தமாக இருந்த மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுதுவிட்டார்.


Click it and Unblock the Notifications











