சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை.. ‘மாநாடு’ மேடையில் சிம்புவை பாராட்டிய பாரதிராஜா !

சென்னை : மாநாடு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா, சிம்புவின் சேட்டைகள் எனக்குப் பிடிக்கும். அந்த சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை என்றார்.

Recommended Video

பிரச்சனைய நான் பாத்துக்குறேன்! என்ன நீங்க பாத்துக்கோங்க! | STR emotional Speech | Maanadu PreRelease

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இத்திரைப்படம் நவம்பர் 25ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

சிம்புவின் பிரம்மாண்டமான நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. தீபாவளி அன்று திரைக்கு வர இருந்த இந்த திரைப்படம் சில பிரச்சினைகளால் நவம்பர் 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 இசைவெளியீட்டு

இசைவெளியீட்டு

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர், இந்த படம் வெளியாவதற்குள் நான் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டேன். எனக்கு நிறைய பிரச்சினை கொடுக்கிறார்கள். படத்தை வெளியிடவிடாமல் தடுத்தார்கள் என்று கண்கலங்கி பேசினார்.

4வது தலைமுறை

4வது தலைமுறை

இதையடுத்து பேசிய பாரதிராஜா, இந்தப் படக்குழு எனக்கு நான்காவது தலைமுறை, சில சமயங்களில் இவர்களைப் பார்க்கும்போது எனக்கு பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது.. நாங்களும்தான் படங்கள் எடுத்தோம். ஆனால், இவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது.

சிம்புவின் சேட்டை பிடிக்கும்

சிம்புவின் சேட்டை பிடிக்கும்

ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக இருக்கிறது. சிம்பு இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்திவிடுவார். எல்லாரும் சொல்வார்கள் சிம்புவைப் பற்றி. அவருடைய சில சேட்டைகள் எனக்குப் பிடிக்கும். அந்த சேட்டைகள் இல்லையென்றால் சிம்பு இல்லை என்றார். சிம்புவுடன் ஒரு படம் நடித்தேன். அவர் ஒரு அற்புதமான குழந்தை. வெளியில் சொல்வதெல்லாம் சும்மா. அவர் மிகவும் அன்பானவர். அவரோடு பணிபுரியும்போது நானும் அவரும் ஒன்று என்றே நினைத்துக்கொண்டேன் என்றார்.

மகிழ்ச்சியாக இருக்கிறது

மகிழ்ச்சியாக இருக்கிறது

இளையராஜா வீட்டுப் பிள்ளைகள், கங்கை அமரன் வீட்டுப் பிள்ளைகள், என் மகன் எல்லோரும் ஒன்று சேர்ந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் உங்களோடு சேர்ந்து அமர்ந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சுப்பு பஞ்சுவின் வீட்டு உப்பைத் தின்று வளர்ந்தவன் நான். பஞ்சு அருணாச்சலம் அண்ணனை இப்போது நினைத்தாலும் மனம் உருகிவிடும். இதையெல்லாம் பார்க்க அவர் இன்று இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X