தனுஷ் நீ வச்ச குறி தப்பாது, உலகத்தையே சுருட்டி கையில வச்சிருக்க: பத்தவச்சது யாருன்னு தெரியுமா?

சென்னை: தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நேற்று மாலை நடைபெற்றது.

வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வரும் 17ம் தேதி வெளியாகிறது.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற வாத்தி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், ஜிவி பிரகாஷ், வெங்கி அட்லூரி, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அப்போது தனுஷை நீ வச்ச குறி தப்பாது, உலகத்தையே சுருட்டி கையில வச்சிருக்க என பிரபலம் ஒருவர் பாராட்டியது வைரலாகி வருகிறது.

 கெத்தாக வந்த தனுஷ்

கெத்தாக வந்த தனுஷ்

தனுஷின் வாத்தி திரைப்படம் வரும் 17ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் வெளியாகும் இந்தப் படத்தை வெங்க அட்லூரி இயக்கியுள்ளார். தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசையுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்தார் தனுஷ்.

 நீ வச்ச குறி தப்பாது

நீ வச்ச குறி தப்பாது

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தனுஷை வெகுவாக பாராட்டினார். "தனுஷ் நீ வச்ச குறி தப்பாது, உலகத்தையே சுருட்டி கையில வச்சுருக்க. நீ கடவுளுடைய குழந்தை. நம்ம பய எவனாச்சும் ஹாலிவுட் போயிருக்கனா...? 'DHANUSH IS THE MAN'. தனுஷை ஒரு ஆர்டிஸ்டாக பார்க்கிறோம். அவன் மனிதன். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது என்னுடைய அனுபவத்திற்காக அல்ல. என் மேல் வைத்த பாசத்திற்காக" என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

இயக்குநர் பாரதிராஜா தனுஷை பாராட்டியதை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். குறிப்பாக "நீ வச்ச குறி தப்பாது, உலகத்தையே சுருட்டி கையில வச்சுருக்க" என சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய பாரதிராஜா, திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் சொல்லிக் கொடுத்ததை பாதிதான் நான் செய்தேன், அதற்கே இவ்வளவு லவ்! தனுஷை அவன் என்று கூறுவது மரியாதைதான். அவன் என் மகன் மாதிரி எனக் கூறினார். கடந்தாண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜா தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார். தாத்தா - பேரன் என்ற இவர்களது காம்போ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 எதிர்பார்ப்பில் வாத்தி

எதிர்பார்ப்பில் வாத்தி

சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள வாத்தி வரும் 17ம் தேதி ரிலீஸாகிறது. தனுஷ் இந்தப் படத்தில் ஆசிரியராக நடித்திருப்பதால் தமிழில் வாத்தி என்ற தலைப்பிலும், தெலுங்கில் சார் என்ற டைட்டிலிலும் வெளியாகிறது. கல்வி அதன் பின்னணியில் நிகழும் சாதிய அரசியலை மைய்யமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தனுஷின் வழக்கமான ஆக்‌ஷன் ட்ரீட் கண்டிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X