Bharathiraja: நிறைவேறிய தாய் கிழவியின் ஆசை.. அது மட்டும் நடந்த பாரதிராஜா காலில்.. ராதிகா நம்பிக்கை!

சென்னை: இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம் தாய் கிழவி. இந்த படத்தில் தாய் கிழவி பவுனு தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்தார். படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்தார். படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டினார்கள்.

அதேபோல் படம் பார்த்த கமல்ஹாசன் தாய் கிழவி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவை கட்டிப் பிடித்து வாழ்த்தினார். மேலும் படத்தை எப்படியாவது பாரதி ராஜாவை பார்க்க வைத்து விடுங்கள். அவர் மிகவும் மகிழ்ச்சி பெறுவார் என்று தெரிவித்தார். பாரதி ராஜாவுக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் படம் வெளியான கால கட்டத்தில் பார்க்க முடியவில்லை. இப்படி இருக்கையில், படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார்.

Bharathiraja Predicts National Award for Radhika Sarathkumar After Watching Thai Kizhavi

அதன் பின்னர் பாரதிராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்த நடிகை ராதிகா, பாரதி ராஜாவின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு, தாய் கிழவி படம் பார்த்தீர்களா? நான் நன்றாக நடித்துள்ளேனா? என்று எல்லாம் கேட்கிறார். அதற்கு பாரதி ராஜாவும் படம் பார்த்தேன், படம் நன்றாக உள்ளது. உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறுகிறார். பாரதிராஜா அவ்வாறு கூறியது, அப்படி மட்டும் தேசிய விருது கிடைத்தால், அதை வாங்கிக் கொண்டு வந்து உங்கள் கால்களில் வைக்கிறேன் என்று கூறுகிறார் நடிகை ராதிகா. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், சில இணையவாசிகள் பாரதிராஜா விரைவில் முழு உடலும் தேறி வரவேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். நடிகை ராதிகாவை தனது கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja Predicts National Award for Radhika Sarathkumar After Watching Thai Kizhavi

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X