twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா போராளிகளுக்கு உதவி.. மாஸ்க், சானிடைசர்கள், கையுறைகளை வழங்கிய பாரதிராஜா!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பிலும், பொதுமக்களுக்காக களத்தில் இறங்கி போராடி வரும் போலீஸ்காரர்களுக்கு உதவும் வகையில் மாஸ்க், சானிடைசர்கள் மற்றும் கையுறைகளை இயக்குநர் பாரதிராஜா வழங்கி உள்ளார்.

    Recommended Video

    யாரும் வெளியே வராதீங்க! கண் கலங்கிய வடிவேலு

    கொரோனா வைரஸ் உலகளவில் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கி வருகிறது. இந்தியாவில் 60 பேர் இந்த கொடிய நோயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    Bharathiraja provides masks and sanitizers to policemen and others

    கொரோனா பாதிப்பை அரசுடன் சேர்ந்து சமாளிக்க தொழிலதிபர்கள், நடிகர்கள் என பலரும் தங்களால் முயன்ற நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர்.

    நடிகர்களில் அதிகபட்சமாக 25 கோடி ரூபாயை அளிக்க அக்‌ஷய் குமார் முன்வந்துள்ளார். டோலிவுட் நடிகர்களும் தாராளமாக பல கோடிகளை கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா கொரோனா வைரஸ் கிருமி மக்களை அண்ட விடாமல் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸ்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு மாஸ்க்குகள், சானிடைசர்கள் மற்றும் கையுறைகளை தானமாக வழங்கி உள்ளார்.

    நாட்டையும், மக்களையும் காக்கும் பணியில் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் போராடி வரும் காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சேவை மிகப்பெரியது என்றும், பொதுமக்களாகிய நாம் அவர்களுக்கு எப்போதும் கடமை பட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

    English summary
    Director Bharathiraja has contributed masks, sanitizers and gloves to policeman, corporation workers and paramedics who have been working had in the field to battle against the virus.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X