கொரோனா பீதி.. தீயாய் பரவும் தகவல்.. நடந்தது என்ன? வீடியோ வெளியிட்டு இயக்குநர் பாரதிராஜா விளக்கம்!

சென்னை: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில் அதுகுறித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.

Recommended Video

தேனியில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குனர் பாரதிராஜா | Bharathiraja

இயக்குநர் பாரதிராஜா தனது சொந்த ஊரான தேனிக்கு சென்ற நிலையில் அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டில் தனிமைப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

அதில் அவர் பேசியிருப்பதாவது, இன்றைய செய்தித்தாளிலும் தொலைக்காட்சிகளிலும் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திதான் பரபரப்பாக போகிறது. நடந்தது என்னவென்றால், என்னுடைய சகோதரி தேனியில் உடல் நலமில்லாமல் இருக்கிறார்.

நானாகவே..

நானாகவே..

அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக முறைப்படி நேர்மையாக அனுமதி பெற்று சென்னையில் இருந்து பல மாவட்டங்களை கடந்து வந்தேன். தேனிக்கு வந்தப் பிறகு பல மாவட்டங்களை கடந்து வந்ததால் தேனி நகராட்சி அதிகாரிகளிடம் கூறி நானாகவே சோதனை செய்து கொண்டேன்.

நெகட்டிவ் என ரிசல்ட்

நெகட்டிவ் என ரிசல்ட்

அதற்கு முன்பாக சென்னையில் சோதனை செய்யப்பட்டது. பின்னர் வரும் வழியில் ஆண்டிப்பட்டியிலும் சோதனை செய்தார்கள். மூன்று சோதனைகளிலும் எனக்கு தொற்று இல்லை, நெகட்டிவ் என அதிகாரிகள் கூறினர். என்னுடைய உதவியாளர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.

ஆரோக்கியமாக உள்ளோம்

ஆரோக்கியமாக உள்ளோம்

அதனை தொடர்ந்து நாங்கள் அனைவரும் எங்களின் நலன் கருதியும் மக்களின் நலன் கருதியும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளோம். அடுத்தப்படத்திற்கு கதையை தயார் செய்து வருகிறோம். இவ்வாறு அந்த வீடியோவில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X