பாரதிராஜா இறுதி சடங்கு.. மனோஜ் மனைவியை துரத்திய மகள் ஜனனி?.. சொத்து பிரச்னையா?.. பிரபலம் ஓபன்

சென்னை: பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடல் வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவரது இறுதி சடங்குக்கு திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சென்று தங்களது மரியாதையை செலுத்தினார்கள். சூழல் இப்படி இருக்க பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன.

இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது மகன் மனோஜ் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வந்தார். இதன் காரணமாக உடல்நல குறைவும் ஏற்பட்டது. அவரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற முனைப்போடு தனியார் மருத்துவமனையில் வைத்தும், வீட்டில் வைத்தும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவருக்கு வயது 84 ஆகும். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Bharathiraja s 500 Crore Estate Balaji Prabhu Opens Up About Reported Family Dispute
Photo Credit:

பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை: அவரது ஆசைப்படி பாரதிராஜாவின் உடல் வத்தலகுண்டு காட் ரோடு பகுதியில் இருக்கும் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாடெங்கிலும் இருந்து பலரும் சென்று தங்களது இறுதி மரியாதையை செலுத்தினார்கள். இன்றுகூட பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் தன் குடும்பத்தினருடன் பாரதிராஜாவின் சமாதிக்கு சென்று; அந்த மண்ணை எடுத்து தன் மகள்களுக்கு பூசிவிட்டார்.

Also Read
ரஜினி முதலமைச்சராகியிருக்கணும்.. பெரிய மிஸ்.. ஓபனாக சொன்ன மனைவி லதா
ரஜினி முதலமைச்சராகியிருக்கணும்.. பெரிய மிஸ்.. ஓபனாக சொன்ன மனைவி லதா

ஏற்பட்ட பிரச்னை: இதற்கிடையே சென்னை நீலாங்கரை இல்லத்தில் பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டிருந்தபோது வந்த அவரது மனைவியிடம் கங்கை அமரன், 'எல்லோரும் விட்டுட்டு ஓடிட்டீங்க.. அவர் அனாதயா போயிருக்காரு' என கத்தினார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, 'இதெல்லாம் எங்கள் குடும்ப பிரச்னை. அதை வெளியே சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை' என சொல்லிவிட்டு சென்றார்.

இறுதி சடங்கில் மோதல்: சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவுடைய இறுதி சடங்கின்போது அவருடைய மகள் ஜனனி; மனோஜின் மனைவியை அங்கிருந்து வெளியேறும்படி சொன்னதாகவும்; மனோஜின் மகள்களைகூட அதில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ராதிகாதான் இந்தப் பிரச்னையை சரி செய்து நிலைமையை சுமூகமாக்கினார் என்றும் தகவல்கள் பரவுகின்றன. ஏற்கனவே, மனோஜ் மனைவி நந்தனா தன்னுடைய ஃப்ளாட்டிலிருந்து காலி செய்ய வேண்டும் என ஜனனி காவல் துறையில் புகாரும் அளித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இந்த விஷயம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மனோஜின் மனைவி அமர்ந்திருந்தார். அப்போது ஜனனி வந்து; அமர்ந்திருந்த நந்தனாவை அங்கிருந்து வெளியேறும்படி சொல்லும்படியான காட்சிகளை பார்க்க முடிந்தது. பாரதிராஜாவுக்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு அவர் வாங்கிப்போட்ட சொத்துக்கள் மதிப்பு இன்று பல நூறு கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

எழுதி வாங்கிய ஜனனி?: அவரது நீலாங்கரை வீடு மட்டுமே 60 கோடி ரூபாய்க்கு போகும். பல சொத்துக்கள் இருக்கின்றன. மலேசியாவில் பாரதிராஜா தன்னுடன் இருந்தபோது அவரிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டதாக கூறுகிறார்கள். தன்னுடைய சொத்தில் மனோஜுக்கு பாதி, ஜனனிக்கு பாதி என்றுதான் முடிவெடுத்திருந்தார். மனோஜ் போன பிறகு நந்தனாவுக்கு 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் போனதாகவும் சொல்கிறார்கள்.மனோஜ் போய்விட்டார்; எங்கிருந்தோ கேரளாவிலிருந்து வந்த நந்தனாவுக்கு ஏன் சொத்துக்கள் போக வேண்டும் என ஜனனி நினைக்கிறாரா என்று தெரியவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X