மிலிட்ரி லுக்.. ராயல் என்ஃபீல்டு பைக்.. ப்பா.. துப்பாக்கி விஜய் மாதிரி மாறிட்டாரே நம்ம பாரதிராஜா!

சென்னை: கடந்த மாதம் 78வது பிறந்தநாளை கொண்டாடியவரா இவர் என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்கு இன்றும் இளமை மாறாது அசத்தி வருகிறார் நம்ம பாசத்துக்குரிய பாரதிராஜா.

நடிகைகளின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றினாலும், இது போன்ற ஆளுமைகளின் போட்டோஷூட் புகைப்படங்கள் தான் மனங்களை கவர்கின்றன.

சமீபத்தில் எடுக்கப்பட்ட பாரதிராஜாவின் மிலிட்ரி லுக் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

மிலிட்ரி லுக்கில்

மிலிட்ரி லுக்கில்

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி இயக்குநர் பாரதிராஜாவின் 78வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவரது சமீபத்திய லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. மிலிட்ரி லுக்கில் என்னம்மா மிரட்டுறே என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

அது மட்டுமின்றி அந்த காஸ்ட்யூம் கலருக்கு மேட்ச் ஆக இருக்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் செம ஸ்வாகாக அமர்ந்து கொண்டு கூலர்ஸை கழட்டி கையில் பிடித்தபடி அவர் கொடுத்த போஸை பார்க்கும் போது தான் பல ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் ஸ்டைல் எப்படி வந்தது என்றே எண்ண தோன்றுகிறது.

துப்பாக்கி விஜய் போல

துப்பாக்கி விஜய் போல

துப்பாக்கி படத்தில் ராணுவ வீரராக தளபதி விஜய் நடித்திருப்பார். இயக்குநர் பாரதிராஜாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும் போது பலருக்கும் துப்பாக்கி விஜய் நினைவுக்கு வந்து செல்வது போல இருப்பதாக பாரதிராஜாவின் இளமை பாராட்டும் விதமாக பதிவுகளை போட்டு வருகின்றனர்.

பாரம்பரிய உடையில்

பாரம்பரிய உடையில்

மற்றொரு புகைப்படத்தில் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு கையில் புத்தகத்துடன் தனக்கே உரிய புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கும் பாரதிராஜாவின் புகைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த வயதிலும் சினிமா மீதும் சினிமா கலைஞர்கள் மீதும் இவருக்கு இருக்கும் ஈடுபாடும், ஆர்வமும் அளப்பரியது எனலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X